பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

247


சிந்துவெளியில் ஆரியர்க்கு முன் பரவி, இருந்த மொழி திராவிடமே ஆகலாம்; (3) திராவிட மொழிகள் ஒட்டு மொழிகள் ஆதலின், அவற்றுக்கும் சுமேரியருடைய ஒட்டு மொழிக்கும் உள்ள தொடர்பை நன்கு சோதித்து உணரலாம்”.[1]

‘நாவிற் பிறக்கும் ‘ட், ண்’ என்பன திராவிட மொழிக்கே உரியவை. இவை எந்த இந்து-ஐரோப்பிய மொழியிலும் இல்லை. வடமொழி இந்தியா வந்தவுடன் இவற்றைக் கைக்கொண்டது. இவை ப்ராஹுயி மொழியிலும் இருக்கின்றன. பிற்கால ப்ராக்ருத மொழிகள் இவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தியுள்ளன. திராவிடர் இந்தியா முழுவதிலும் பரவியிருந்த அந்தப் பழங்காலத்தில், ஆரியர் இவற்றைத் திராவிடத்திலிருந்து பெற்றிருத்தல் வேண்டும்....

தன்மைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும் பொழுது பெறுகின்ற மாறுதல் கோண்ட், தமிழ் முதலிய மொழிகளில் ஒத்திருத்தல் காணத்தக்கது. கோண்ட், கூய் முதலிய மொழிகள் நெடுங்கலமாகத் தமிழ்-மலையாளம் முதலிய மொழிகளிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பினும், இவற்றினிடம் மேற்கூரிய ஒருமைப் பாடு இருத்தல் இன்றுள்ள பழைய தமிழ் நூல்கள் செய்யப்பட்ட பழைய காலத்தைப் போல மும்மடங்குள்ள பழைய காலத்தில்[2] வட இந்தியாவில் இன்றைய தமிழர் முன்னோரும் கொண்டர்


  1. Sir John Marshall’s mohenjo-Daro and the Indus Civilization’, Vol. I. p.42.
  2. தமிழில் இன்றுள்ள பழைய நூல்கள் சங்க நூல்களே. அவற்றின் காலம் 2000 ஆண்டுகள் எனக் கூறலாம். அக்காலத்தைப் போல மும்மடங்கு காலம் எனக் கால்ட்வெல் கூறுவதால், 6000 ஆண்டுகள், அஃதாவது கி.மு.4000 ஆண்டுகட்கு முன் என்பது பெறப்படுகின்றது. இந்தக் காலம், சிந்துவெளி நாகரிக காலத்தை ஏறக்குறைய ஒத்துள்ளதைக் காண்க. ‘கொண்டர்’ ஆஸ்ட்ரேலிய இனத்தவர் என்பதும், திராவிடர் ஆதிக்கத்துக்கு அடங்கி அவரோடு வாழ்ந்தவர் என்பதும் முன்னமே குறிப்பிடப்பட்டமையும் ஈண்டு நினைவிற் கொள்ளல் தகும்.