பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மொஹெஞ்சொ - தரோ


உள்ள மலம் கழிக்கும் இடங்களையே ஒத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.[1]

நகர ஆட்சி முறை

இக்கால இந்தியாவில் நாகரிகம் மிக்குள்ளனவாகக் கருதப் படும் நகரங்கள் பலவற்றிலும் காண இயலாத சுகாதார முறைகள் 5000 ஆண்டுகட்கு முற்பட்ட மொஹெஞ்சொ-தரோவில் மேற்கொள்ளப்பட்டன என்பது பெரு வியப்புக்கு உரியதாகும் அன்றோ? ஒவ்வொரு வீட்டிலும் சந்திலும் குறுந்தெருவிலும் நெடுந்தெருவிலும் சுகாதார விதிகள் கண்டிப்பாகக் கைக் கொள்ளப்பட்டிருந்தன என்னல் ஒரு போதும் மிகையாகாது. நெடுந் தெருக்களைவிடக் குறுந்தெருக்களும் சந்துகளும் மிக்க துய்மையாக இருந்தன எனின் இம்முறைக்கு நேர்மாறான முறையில் இக்கால நகரங்கள் இருக்கின்றன. எனின் - அக்கால மக்களின் ஒழுங்குமுறையும், கட்டுத் திட்டங்கட்கு அவர்கள் அளித்து வந்த பெரு மதிப்பும், சுகாதார முறையில் வாழவேண்டு மென்று அவர்கள் விரும்பி நடந்துவந்தமையும், நகராண்மைக் கழகத்தாரின் ஆட்சித் திறனும் நன்கு விளங்குகின்றன அல்லவா? தெருக்களில் புழுதி கிளம்பாதிருக்க நாளும் தண்ணிர் தெளிக்கப் பட்டு வந்தது. பத்துப் iiதினைந்து வீடுகட்கு ஒன்றாக வைக்கப் பட்டிருந்த தொட்டிகளிலேயே குப்பை கூளங்கள் கொட்டப் பட்டு வந்தன. நகரத்தின் பல இடங்களில் இக்காலத்திய பொது இடங்கள் - இக்காலத்துப் பூம்பொழில் (Park) போன்றவை - இருந்தன என்று நினைப்பதற்குரிய சான்றுகள் கிடைக்கின்றன.

ஒருநகரம் நன்முறையில் அமைந்துள்ளது. எனின், அது பரந்த இடத்தில் அமைந்திருதல் வேண்டும் நீண்டு அகன்றதெருக்களைப் பெற்றிருத்தல் வேண்டும்: எல்லாப் பாதைகளும் விலக்கின்றித் தூய்மையாக இருத்தல் வேண்டும் கழிநீரைச் செவ்வனே கொண்டு


  1. Dr. Mackay’s ‘Further Excavations - Mohenjo-Daro’ p. 166