உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 யாரால்? யாரால்? யாரால்? பெரும்பாலான பிராமணரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்கள் வசதிக்கேற்ப - நேரத்திற் கேற்ப - தேவைக்கேற்ப -ஆட்டிப்படைத்திடவும், அவதியுறச் செய்திடவும் அவ்வப்போது கிடைத்த வேத புத்தகங்களை - ஸ்மிருதிகளை - படைக் கருவிகளாகக் கொண்டு "இதுதான் இந்துமதம்" என்று மிரட்டப்பட்டதைத் தவிர வரையறுக் கப்பட்ட - வகைப்படுத்தப்பட்ட - சமநீதி வழங்குகிற ஒரு செம்மையான அமைப்பாக அப்படியொரு மதம் உண்டு என்று யாராவது வாதிடத் தயாராக இருக்கிறார்களா? இல்லை! இல்லவே இல்லை! நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களை யெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்பத் தொகுத்துப் பெயர் கொடுக் கப்பட்ட இந்த மதம் சாதிக்கொரு நீதி வழங்கிடவில்லையா? அதையே மனுஸ்மிருதி என்று கூறிடவில்லையா? பெரியாரும் அண்ணாவும் தனிமனிதர்களாக இயங்காமல் திராவிடப் பேரியக்கத்தை வளர்த்துப் பழமை வாதிகளின் மீதும் பயங்கர வெறியர்கள் மீதும் தொடுத்த போரின் காரண மாகத்தானே, இந்தச் சமுதாயம் வைகறைப் பொழுதை யாவது கண்டிருக்கிறது! இன்னும் முழுமையாக விடிந்து ஒளி ஞாயிறு உலவிடத் தொடங்கினால்-இருள் சாம்ராஜயத்தின் ஆந்தைகளும் கோட்டான்களும் வௌவால்களும் தங்கள் வெறுப்பைக் கக்கிடத்தானே செய்வார்கள்! அதன் அடை யாளம் தான் "சண்டே" இதழில் "சோ" அவர்கள் காரசார மாகப் பொழிந்துள்ள கண்டனக் கணைகள்! பொல்லாத வார்த்தைகள்! இல்லாத பழிகள்! ஆனால் பாவம்; நம்மை வெல்லாத - வெல்ல முடியாத வாதங்கள்! 1981-ஆம் ஆண்டிலேயே தீண்டாமை உணர்வும் - சாதிக் கொடுமைகளும் -- இருக்கின்றன என்றால்;பல ஆண்டு களுக்கு முன்பு அந்த உணர்வுகளும் கொடுமைகளும் சமுதா யத்தை எந்த அளவுக்கு உருக்குலைத்திருக்கும்? அவற்றை எதிர்த்துப் போராடவும் அவற்றிற்கான ஆணிவேரைக் கண்டு பிடித்து அதனை வெட்டி எறியவும் பெரியாரும் அண்ணாவும் பாடுபட்டிருக்காவிட்டால், இன்றைக்கு உத்தி யோகங்களில் யார் நிறைந்திருப்பர்! கல்விக் கூடங்களில் யார் வீட்டுப் பிள்ளைகள் குழுமிக்கிடப்பர்! எந்தப்பிள்ளைகள் மாடுமேய்த்துக் கொண்டிருக்கும் ! சேமுதாய அந்தஸ்து” என்ற பெரும் புரட்சியைத் தமிழகத்தில் -தென்னகத்தில் J