உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 யாரால்? யாரால்? யாரால்? முன்பு, ஆட்சியைவிட்டு இறங்கியபோது எழுதியுள்ள நீண்ட கடிதத்தின் சில பகுதிகளை இங்கே நினைவூட்டுகிறேன். (கடவுள் கொள்கையில் தந்தை பெரியார் மிகவும் தீவிரவாதி! கடவுளே இல்லை என்று மறுப்பவர்! உண்டென்பார் சிலர் இல்லையென்பார் சிலர் எனக்கில்லை கடவுள் கவலை- என்று பாடியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் கொள்கையே தி.மு.கழகத்தின் கடவுட் கொள்கை யென அறிவித்தவர் அண்ணா. ஆத்திக்கப் பெரியோர் கூடியதோர் அவையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்ட பண்டார சன்னதிகள் ஒருவர் "கருணாநிதி அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளமாட் டார் என்றாலும். கடவுள் காரியங்களுக்கு அவர் ஆட்சி குறுக்கே நிற்கவில்லை என்றார். அதற்கு விடையளித்த நான், "கடவுளை நாம் ஏற்றுக்கொள்வது பெரிதல்ல, கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்" என்று சுட்டிக் காட்டினேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற கவி தாகூரின் தத்துவத்தைத் தான் அறிஞர் அண்ணா வும் அவர் அமைத்த கழக அரசும் செயல்படுத்தியதை நினைவூட்டுகிறேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலாரின் கருத்தாழமிக்க வரிகளை மறவாமல் கடவுட் பணியென்பது என்னவென்று தெளி வாக உணர்ந்து காரியமாற்றியதுதான் கழக அரசு!" உடன்பிறப்பே, 1976-ல் எழுதிய அந்தக் கடிதத்தின் முகப்புரையில் ஒரு பகுதிதான் இது! கடவுள், மதம், சடங்குகள் போன்றவற்றில் பண்டித நேரு அவர்கள் எத்தகைய கொள்கை கொண்டிருந்தார்- அவர் மறைந்த பிறகு கிடைத்ததும் அவரால் எழுதப்பட்டது