உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 29 தகுதி படைத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வரலாம் என்று சட்டம் கொண்டு வந்ததே கழக அரசு அதைத்தான் அக்கிரமம் என அடுக்கு கிறாரா? அவதூறு 1 சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்று (வி.ஐ.பி.) முக்கியஸ்தர்களுக்கு ஆலயங்களில் கட்டப்படும் பரிவட்டம், எடுக்கப்படும் பூரண கும்பம் ஆகிய தனி மரியாதைகளை நிறுத்தியதே கழக அரசு; அதைக் குற்ற மெனக் கூவுகிறாரா? - அறநிலையத்துறை மானிய விவாதமே சட்டப் பேரவை யில் நடக்காமல் இருந்த நிலையை மாற்றி 1970 ஆம் ஆண்டு முதல் அத்துறைக்கெனத் தனி அமைச்சரும் - பேரவையில் தனி விவாதமும் தொடங்குவதற்குக் கழக அரசு வழி வகுத் ததே; அதனைத் தவறு எனத் தாக்குகிறாரா? அறநிலையத் துறையின் பொறுப்பில் 1967 வரையில் 9,600 அறநிலையங்கள் மட்டுமே இருந்ததை அறிந்து, த தனி அலுவலர் நியமித்து ஐந்து ஆண்டுகளில் நடந்த ஆய்வில் மட்டும் (1971 முதல் 1976) சுமார் நாற்பத்தி இரண்டாயிரம் (42,000) அற நிலையங்களையும் அவற்றுக்குச் சொந்தமான இரண்டு லட்சம் ஏக்கா நிலங்களையும் தனியார்களின் ஆதிக் கத்திலிருந்து விடுவித்து அறநிலையத்துறை பொறுப்பில் காண்டு வர முயற்சி மேற்கொண்டு அப்போதே இருபத்தி ஐயாயிரம் அற நிலையங்களையும் அறுபத்தி ஐயாயிரம் ஏக்கர் நிலங்களையும் கொண்டு வந்ததே கழக அரசு; அதைத்தான் இமாலயத் தவறு என இயம்புகிறாரா? 1967ல் தமிழ்நாட்டுக் கோயில்களின் மொத்த மானம் ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய்! இடையே ஏற்பட்ட தவறுகளைக் களைந்த காரணத்தால் 975-ல் ஆண்டுக்குப் பனிரெண்டு கோடி ரூபாயாக அந்த வருமானம் ஆகியதே அதைப் பெரும்பிழையெனத் தூற்றுகிறாரா' இந்த 'தூயவர்'? தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோயிலில் உள்ள சுவாமி யின் பெயரை தன்னுடைய பிள்ளைக்கு வைத்து, ஆண்டவன் பெயரால் இருந்த சொத்துக்களை தன் குடும்பத்துக்குச்