உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 யாரால்? யாரால்? யரரால்? பண்டித ஜவகர்லால் நேரு திட்டவட்டமாக ஒன்றைச் சொன்னார். அவர் தன்னை ஒரு நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளக்கூட அஞ்சியது இல்லை. அவர் ஆளுகின்ற பொறுப் யில் வீற்றிருந்த காரணத்தினால் இந்தியாவினுடைய தலைமை அமைச்சராக ஏறத்தாக பதினேழு ஆண்டுக்காலம், அவர் கொலு வீற்றிருந்த காரணத்தினால், எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் மற்ற வர்களுடைய உரிமை பறிபோய்விடக் கூடாது என்கின்ற சூழ்நிலையும் இருந்த காரணத்தினால் அவர் தாம் நாத்திகர் என்பதை மதங்களிலே தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டவில்லையென்றாலும், அவர் மறைந்த நேரத்தில், தான் யார் என்பதை உலகத்திற்கு எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் மறைந்தார். அவர் மறைந்த பிறகு, அவர் எழுதிவைத்துச் சென்ற யிலை எடுத்துப் படித்தபோது அதிலே காணப்பட்ட வாசகங்கள் எவை? "நான் மறைந்துவிட்டால் எனக்கு வைதீக முறைப்படி தன சம்பிரதாயப்படி எந்தச் சடங்குகளும் செய்யக் டாது!" இது நேருவினுடைய உயிலில் காணப்பட்ட வாசகங்கள். அது மாத்திரம் அல்ல, தம்முடைய உடல் எரிக்கப்பட்ட சம்பலை இந்திய நாட்டு மண் முழுவதும் பரப்புகின்ற அளவுக்கு விமானத்தில் எடுத்துச் சென்று ஆங்காங்கு தெளித்து விடுங்கள்; நான் ஓடி ஆடி மகிழ்ந்த கங்கை நதிக் கரையிலும், யமுனை நதிக்கரையிலும் சாம்பலைத் தெளித்து விடுங்கள் - நதியிலே கரைத்து விடுங்கள் - எந்த வைதீகச் சடங்குகளும் நான் மறைந்த பிறகு எனக்காக நடத்தப்படக் கூடாது என்று தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துவிட்டுத் தான் பண்டித நேரு அவர்கள் மறைந்தார்கள். -