உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+48 யாரால்? யாரால்? யாரால்? இருக்கின்ற சுற்றுப்பயணிகள் பார்த்துக் களிக்கக் கூடிய நிலை மையில் அந்தக் கடவுள்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், இங்தே நாம் ஆயிரக்கணக்கான கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கிறோம். ஐயா சொன்னால் கோபம் வரலாம், அண்ணா சொன் ரே என்று ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். கருணாநிதி சொல்வதற்குக் கடும் ஆத்திரம் கிளம்பலாம். வீரமணி சொல்கிறாரே என்பதற்காக வெறுக்கலாம். தேசியக்கவி சுப்பிரமணிய பாரதி என்ன சொன்னார்? 'ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்' இந்த வார்த்தையைப் பெரியார்கூட இவ்வளவு தாராள மாகப் பயன்படுத்தவில்லை. அண்ணாகூட பயன்படுத்தவில்லை இவ்வளவு தாராளமாக! (ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!" என்று தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பாட வில்லையா! எனவேதான் நாம் ஆயிரக்கணக்கான தெய்வங்களுக்கு நூற்றுக்கணக்கான ஜாதிகளுக்கு - மத வேறுபாடுகளுக்கு- நம்மையும் பலி கொடுத்துவிட்ட காரணத்தால் - நம்மை உட்படுத்திக் கொண்டு, ஆட்படுத்திக் கொண்டு விட்ட காரணத்தால் இந்தச் சமுதாயத்தினுடைய முன்னேற்றமே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்காலம் பின்னோக்கிக் கிடக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகத்திலே வளர்ந்து வரும் நாடுகளையெல்லாம் பார்க் கிறோம். சீரிழந்த ஜப்பான் இன்றைக்கு சிங்கார புரியாக வளர்கிறது.