பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. இதுவர்கள் அறிவியல் கற்கும் முறை C. சிறுவர்கள் அறிவியல் கற்கும் முறை சிறுவர்கள் ஏனையவற்றைக் கற்றுக்கொள் வதைப் போலவே, அறிவியலையும் பல்வேறு வழி களில் கற்கின்றனர். அவர்கட்கு அறிவியல் பாடத்தில் கவர்ச்சி பிறக்கும்பொழுதும், அது தங்கட்குச் சில வேற்றுமைகளை நல்கும் என் பதை அவர்கள் காணும்பொழுதும், அப்து உளங் கவரும்படி வருணிக்கப்பெற்றுள்ள பொழுதும், அஃது அவர்களால் சிறிதளவாவது சூழ்ச்சித் திறனுடன் கையாளக் கூடியவாறுள்ள பொழுதும், அஃது அதிகக் கடினமாக இராம லும் ஓரளவு சிந்தனைக்கு வேலை தருமளவுக்குக் கடினமாக இருக்கும்பொழுதும், தாம் அறிய விரும்புவனவற்றைக் கண்டு கொண்டதாக மன நிறைவு தரும்பொழுதும் அதனை உடனே மிக உற்சாகத்துடன் கற்கின்றனர். இஃது அறி வியலுக்கு மட்டிலும் உரிய சிறப்புப் பண்பன்று. இஃது எண்கணிதம், மொழிப் பாடங்கள், கலைப் பாடங்கள், அல்லது பிற பாடங்கள் ஆகிய அனைத்திற்குமே பொருந்தும். சிறுவர்கள் தமக் காகத் தேர்ந்தேடுக்கப்பெற்ற செயல்களே இந்த நிலைகட்குப் பொறுப்பாகின்றன. இவற்றை மனத்திற்கொண்டு சிறுவர்கள் அறிவியலைக் கற்கும் முறைகளில் சிலவற்றை ஆராய்வோம். 驗 சோதனை செய்தலால்: அறிவியல் விதிகளையும் பொதுமைக் கருத்துக் களேயும் அறிந்துகொள்ளும் முக்கியமான முறை களுள் சோதனை செய்தல் ஒரு வழியாகும். சோதனைகளை எளியனவாக அமைத்துக் கொள் வால் வேண்டும்; மிகச் சாதாரணப் பொருளே போதுமானது; ஏறத்தாழ எப்பொழுதும் விரும் பத்தக்கதும் அதுதான்; மாளுக்கர்களே தம் முடைய சோதனைகளைத் தொடங்கிவைப்பதில் வல்லவர்கள் ; தேவையான பொருள்களைத் தம் இல்லங்களினின்றே கொண்டு வந்துவிடுவர்; அச்சோதனைகளைச் செய்வதிலும் உற்சாகமாக இருப்பர். ஒரு சில குறிப்புக்களை ஈண்டு நினைவில் இருத்துதல் வேண்டும் : 1. மாளுக்கர்களைச் சிந்திக்கத் தூண்டுவதற் குக் காரணமான சோதனைகளையே மேற்கொள் ளுதல் வேண்டும். ஒவ்வொன்றையும் ஆசிரி யரே வெளிப்படையாகச் சொல்லக்கூடியதாக வுள்ள ஒரு சோதனை வளர்ந்து வரும் மனங் களுக்கு ஊட்டம் அளிப்பதில்லை. 10 2. ஒரு சோதனையின் நோக்கத்தைப்பற்றிச் சிறுவர்கள் இடைவிடா விழிப்புடன் இருத்தல் வேண்டும். அந்த நோக்கத்தை எளிய நேர் முறையில் கரும்பலகையில் எழுதுவது எப் பொழுதும் விரும்பத் தக்கது. மாளுக்கர்களே எழுப்பிய புதிருக்குத் தீர்வுகாண்பதற்கு மேற் கொள்ளும் சோதனையில் இஃது எளிது. எடுத் துக்காட்டாக : இங்கிலாந்தில் சிறுவர்கள் குளிர் காலத்தில் பனிக்கட்டி மூடிய சாலையில் ஒரு நாள் காலையில் பள்ளிக்கு வருகின்றனர் எனக்கொள்வோம். பனிக்கட்டியைப் போக்கு வதற்காகப் பள்ளிக் காவற்காரன் பள்ளி வாயிற் படிகளில் உப்பினைத் தூவி வைக்கின்ருன். பனிக்கட்டிக்கு என்ன நேரிடு அங்ங்ணம் ஏன் நேரிடு கின்றது என்றும் அறிய விரும்புகின்றனர். காரணத்தைக் கண்டறிவதற்காக அவர்கள் சோதனை யொன்றை ஏற்பாடு செய்யத் தீர் மானம் செய்கின்றனர். தாங்கள் சோதனை செய்வதன் காரணக் குறிப்பினை அவர்கள் உணர்கின்றனர் ; ஆகவே, இறுதியான மன நிறைவினைத் தரும் முடிவிற்குத் தம் சோதனை யைக் கொண்டுசெலுத்துகின்றனர். பாடப் புத்தகத்தினின்றும் வேறு சோதனைகள் எழுதல் கூடும்; ஆளுல் இயன்றவரை செயல் திட்டம் மாளுக்கர்களாலேயே தயாரிக் கப் பெறு த ல் வேண்டும். சிறுவர்கள் கின்றது என்றும், 3. வெற்றிகரமாகச் சோதனை செய்தலுக்குக் கவனத்துடன் மேற்கொள்ளப்பெறும் திட்ட மிடுதல் மிகவும் இன்றியமையாதது. முடிந்தால் பொருத்தமான பொருள்கள் சிறுவர்களாலேயே திரட்டப்பெறுதல் வேண்டும். செயல்முறைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பெறுதல் வேண்டும். முடிவுகளை உறுதியாக அடைவதற்கு அச் செயல்முறைத் திட்டம் மிகச் சரியாகப் பின் பற்றப்பெறுதல் வேண்டும்.

4. இயன்றவரை சிறுவர்களே சோதனை களைச் செய்தல் வேண்டும். அவர்கள் தனித் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நின்று சோதனை செய்யலாம்; இஃது அவர்கள் மேற் கொள்ளும் சோதனை வகைகளையும் கிடைக்கக் கூடிய பொருள்களின் அளவினையும் பொறுத் தது. தீ பயன்படும் சோதனைகளையும், அல்லது தீங்குகள் நேரிடக்கூடிய சோதனைகளையும்,

10