பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் “ சாவுறதுக்குப் பள்ளிவாசல் இல்லாத பயலுக. நாய் களுக்கு --குலைக்கத்தான் தெரியும்! என்று தமக்குள் முனகிக் கொண்டார், அவருடைய எண்ணத்திலே இடி விழுந்தது மாதிரி, வழுக்கை விழுந்த உச்சந்தலையிலே ஒரு சொட்டு மழைத் தண்ணீர் விழுந்தது. இடியும் இடித்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தார். சூலுற்ற கருமேகங்கள் கூடிக் குமுறிக் கறுத்துக்கொண்" டிருந் தல'. மழைக்கு ஆரம்பமாக ஒன்றிரண்டு துளிகளும் விழுந்தன. உடனே மற்றத்தைவிட்டு எழுந்து, தாரிசாவுக்குச் சென்று சாய்ந்து கொண்டார். 'மளெ வார மாதிரி சிருக்கே. இன்னம் ராசையா பள்ளிக்கூடத்திலிருந்து வரக் காணவே, இந்த வேலுப் பயலும் எங்கேயோ தொலைஞ்சு பொயட்டான். இல்லாட்டி, அவனை யாவது போயி பார்த்துட்டு வரச்சொல்லலாம்' என்று எண்ணியவாறு, சுண்ணை ஏறச் சொருகி, நாக்கில் கூடிநின்ற புகையிலையின் சுவாரசியக் கசப்பை அனுபவித்துக் கொண்டிருந்தார். அனவரத விநாயகம் பிள்ளை திருநெல்வேலி சைவ வேளாளப் பிள்ளைமார்களில் செயலும் செல்வமும் மிக்க வர், அனவரதமும் விநாயகப் பெருமானாகவே செழித்து வளரும் ஆரோக்கிய திடகாத்திர முடையவர். வீடு வாசல் முதலிய சொத்துக்கள் போக, அம்பாசமுத்திரம் சரகத் தில் நிறைய: நில புலன்களும் உண்டு. கன்னடியன் காலின் முதல் பாசனப் பயிர் ஆன தால், தீய்வு என் பதையே அறியாத வயல்கள் அவை, ஊரிலே உள்ள பெரிய மனிதர்களில் அவரும் ஒருவர்தான் என்றாலும், எவ்வா நிலச்சுவான்தார்களையும் போலவே, அவரும் சர்க்காருக்கு டிமிக்கி கொடுத்து நெல்லை ஒதுக்கிக்கொண்டு போனவர்தான். ஒரு காலத்தில் பிராமணத் துவேஷியும், ஜஸ்டிஸ் அனுதாபியுமாயிருந்த பிள்ளையவர்கள், சிறை வாசம், தடியடி முதலிய தண்டனைகள் இனிமேல் கிடை BLAYாது என்ற தைரியம் ஏற்பட்டவுடன் தாம் ஒரு காலத்