பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரௌபதி அரண்மனை மேன்மாட முன்றிலில் நின்று அர்த்த மற்று வானைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் கவலை? கள் மோதி மோதி நெஞ்சம் மரத்துப் போயிருந்தத;' . ' இறுகிப்போன இதயத்துக்குள்ளிருந்து குறுகுறுக்கும் நப் 'பாலசயும், ஒதுக்கமுடியாத துயரத்தின் உறுத்தலும் என்னை நிலை கொள்ள வி!...ாமல் அலட்டின. எனினும், கண்ணீர் சிந்தலோ, வாய் விட்டு அழுது நெஞ்சின் பளுவைக் குறைக் கவோ மனசில் தெம்பும் திறனும் இல்லை. காரணம் அன்றைய போர். ஒரு புறம் கர்ணன், என் காதலன்; மறுபுறம் அர்ஜுனன், என் கணவன். இருவரும் போர் புரிகிறார்கள், இருவரில் யார் விழுவார்கள்? அவர் கள் வீழ்ச்சியைப் பொறுத்துத்தான் என் வாழ்க்கையும் இருக்கிறது இப்படியெல்லாம் நெஞ்சக் குகையில் எண் ணங்கள் வெந்து கொண்டிருந்தன, தூரத்தில் சங்கும் தாரையும் பயங்கரமாக ஓவித்தன. கிழிபட்டு வழிவிடும் காற்றில் வேகம் குறையாது ஹாங் காரிக்கும் அஸ்திரங்களின் இசையும் கேட்டது. எனினும் காது மரத்துவிடவில்லை. திடீரென்று 'அப்பா, மகனே!' என்று அலறும் சப்தம் காதில் விழுந்தது- அதுவும் எங்கள் அரண்மனையிலிருந்து! மாடத்திலிருந்து கீழே குனிந்து பார்த்தேன். குந்தி தேவி தலைவிரிகோலமாய் ' அப்பா, மகனே!' என்று கதறிக் கொண்டு ஓடினார், அந்தப் பரிதாபக் குரல் என் நெஞ்சில் பாய்ந்து அழுந்தியது. மகன்!- அர்ஜுனமகாராஜாதான் இறந்துபட்டார் என்று மனசில் பட்டது. உடனேயே! மனைவி என்ற பாந்தம் மனசைக் கொந்திற்று . குபீலென்" அழ நினைத்தேன். ஆனால் திறனில்லை. ஒன்றும் புரியாமல் தின்றேன். கணத்துக்குள் டமாடமே நிலைபெயர்ந்து தாழ்வ தாக உணர்ந்தேன். அவ்வளவு மயக்கம், மாடத்தைவிட்டு இறங்கி , களத்தை நேரில் காண எண்ணினேன். இறங்கி