பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை 33 பெயர் என்ன வென்பதே பலருக்குத் தெரியாது. ஐ. பி. பிள்ளை என்ற இந்தப் பட்டம் அவருடைய பிதுர்க்களில் 3. Jாரோ ஒருவர் ' மஞ்சள் கடுதாசி' நீட்டியதன் விளைவாய் அவருக்குக் கிடைத்த ஒரே பிதிரார்ஜிதம்.) ஐ. பி. பிள்ளை' இப்படிக் குட்டை உடைக்கத் துணியா வும், அவருடைய பேச்சு வேலியைத் தாண்டிவிடக் கூடாதே என்று முந்திக்கொண்டு, சேவைக்கு வராமல் போற தாவ ஓ!? அப்பவே சேவை முடிஞ்சிட்டுது . அதனாலே, சும்மா இப்பிடி கிழக்கே போயி காத்தாடிட்டு வாரோம் என்றார் சுத்தமல்லிப் பண்ணை, சுத்தமல்லிப் பண்ணை இவ்வளவு பேசுவதற்குள்ளாகவே அவருடைய வாயிலிருந்து அடித்த நாட்டுச் சரக்கின் நாற்றம் பிள்ளையவர்களின் சுவாசத்தை உலுப்பிற்று. சுத்தமல்லிப் பண்ணை போன்ற பெரிய மனிதர்கள் பலர் கருட தரிசனத்தைச் சாக்காகக் கொண்டு, இறைச்சி வாங்கி அதை அப்படியே மிச்சம் பிடித்து, தாமரைக் குளச் சாராயக் கடையில் வறுத்த கறியாக மாற்றிக் கொள் வதும் பிள்ளையவர்களுக்குத் தெரிந்தது தான். எனினும் ஜாதி அபிமானம், ஊரான் பொல்லாப்பு முதலியன குறித்து அதை வாய்விட்டுக் கூறி வம்புச் சனியனே பிள்ளை புவர்கள் விலைக்கு வாங்க விரும்பவில்லை. என்ன பிள்ளைவாள். பேசமாட்டிங்கியளே என்று பண்ணை விசாரித்ததும், நாறும்பூநாத பிள்ளையவர்கள் கழுத்தில் கிடந்த உத்திராக்ஷத்தைத் தொட்டுப் பார்த்து விட்டு, * நமசிவாய” என்று தமக்குள் முனகிக் கொண்டார்;

  • பேசாமெ என்ன? விசயம் இருந்தால்லெ...

அதென்ன அப்பிடிச்சு சொல்லுதிய? ரெண்டுபட்டுக் கிடந்த ஊரே ஒண்ணாப் போயிரும் போல இருக்கு. பேசற துக்கா விசயமில்லெ என்று தாம் பிரேரேபிக்க இருந்த விஷயத்திற்கு அங்குரார்ப்பணம் செய்தார் பண்ணை,