பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை ஆடிடும் நாடுகள் போறானுவளாம். அதுக்கு நம்ம அண்ணாச்சிகளெல்லாம் இந்தப் பாப்பாரப் பயல்களோடே சேர்ந்துகிட்டு, பணம் பிரிக்கப் போறானுவளாம். பாத்தியளா? என்றார் பண்ணையவர்கள். ஊரிலே பஞ்சம் வந்து ஊரே ஆட்டம் சுண்டுட்டு தில்லே. உடனே சாமிக்கும் ஆட்டம் கண்டுட்டுது” போலுக்கு” என்று தம் வாழ்க்கையில் அடிமேல் அடியாக: அனுபவித்த கஷ்டங்களினால் மனசில் கனத்துவரும் நாஸ்திக மனப்பான்மையுடன் கிண்டல் செய்தார் ஐ. பி, பிள்ளை. "ஐ. பி. பிள்ளைவாள், அந்தப் பயலுகளைப்பத்தி ஆயிரம் சொல்லுங்க . சாமியைப்பத்தி சொல்லறதுன்னா..... அது நல்லால்லே?' என்று கூறித் தமது தெய்வ பக்தியை நிலை நிறுத்தினார் பிள்ளை. உடனே ஐ. பி. பிள்ளையும் தம்முடைய பேச்சை விட்டுக் கொடுக்காமல் சாமியைப் பத்தியா சொல்லு {தேன். ஊ6ாரிலே பட்டினி வந்ததும், இந்தப் பயலுகளுக்கும், வக்கு அத்துப் போச்சி, சும்மாயிருப்பானுவாா? நல்லா யிருந்த சாமியை நாலு ஆட்டு ஆட்டியிருப்பாவை என்று தமது பேச்சின் உட்கருத்தைக் கம்பீர!.titக விரித்துரைத் தார், அப்பிடியூ ஞ் சொல்லாதிங்க. எல்லாம் சாமி முன்னே திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்துத் தானே நடத்து தாங்க, சாமியுமா கெட்டதைச் செய்யும்? என்று வாதித் தார் நாறும்பூநாத பிள்ளை. 'ஆமா, சாமிதான் கையை நீட்டி முன்னே கிடந்த சீட்டை, 'இந்தா'ன்னு எடுத்து நீட்டிச்சாக்கும் , டேங்க ளுக்கு உலகமே தெரியலே” என்று அடித்துப் பேசினார் ஐ. பி, பிள்ளை . சவத்தை விட்டுத் தள்ளுங்க, சாமியே அவங்க சாமி யாப் போயிட்டுது. நாமெ என்னத்தைச் செய்ய? என்று சலித்தார் பண்ணை, அதோடு விடாமல் “ “ நம்மவங்களே"