பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் படை பட்ட சத்தியாக்கிரஹத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டினார். நிக்குது, நிக்கலெ, இந்தப் பயலுக' மடிவே நம்ம காசு ஏறப்பிடா து” என்று அடித்துப் பேசினார் ஐ. பி. இருந்தாலும், சாமி காரியம் பாருங்க, இதிலே தடங்கல் செய்றதுன்னா ..........." என்று இழுத்துப் போட் டார் பிள்ளை, " நீங்க என்ன இப்பிடிச் சொல்லு திய? உங்களுக்கு உலகமே தெரியலெ. சாமிக்கா? இவ்வளவும் செய்யப் போறானுக? எல்லாம் வயித்துச் சாமிக்குத்தான்” என்று போதை படியிறங்கி நின்ற வேளையில் தம்மிருக்கையையும் அறிமுகப்படுத்திக்கொண்டார் பண்ணை . ஆமா, " ஊரிலாம்பட்ட பார்ப்பானுங்களுக் கெல் லாம் படியளப்பாங்க, நம்பவனும் கையிலே ஆப்பிட்டதெச் சுருட்டிக் கிடுவானுவ. எல்லாம் காரியமில்லாமலா கட்டி பளுவாங்க என்றார் ஐ. பி. பிள்ளை. பிள்ளையவர்களோ விட்டுக் கொடுக்கவில்லை. சாமி? காரியத்தை அவ்வளவு லகுவில் உ.தறிவிடக் கூடிய மனட்? பக்குவம் அவருக்கு இல்லை. அதனால் பிராமண போஜனத் தை எதிர்க்கும் அந்த இரட்டையரிடம் அன்னதானம் செய்தா புண்ணியந் தானே என்று மிகவும் அடக்கத் துடன் கூறினார். அன்ன தானமா? வேலையத்த கவிதைகளுக்கா விருதாச் சோறு?” என்று சீறினார் ஐ, பி. என்ன பிள்ளைவாள், ஏன் தயங்குதிய? பயப்படாமெ" அவனுக வந்து கேட்கிறப்போ கையை விரிச்சிருங்க” என்று தைரியமூட்டினார் பண்ணை . . சரி என்று அந்த' உடனடிப் பிரச்னையைத் தீர்க் கும்படி ஒரு வார்த்தையைப் போட்டு, நழுவ உத்தேசித்