பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநா தன் கதைகள் சித்திரப் பாவை பேசர லிருப்பாள். தலையை அள்ளிச் செருக கோழிவால் கொண்டை போட்டிருப்பாள். நெற்றியின் நடுவே ஓடி, உச்சி வசிடோடுமுடியும் பச்சை குத்திய தாமம் அவள் கண்களின் பாய்ச்சலை அளக்க உதவும் கேந்திரமாகத் துவங்கும், மழமழப்பான அவளது அவ" யங்கள் யார் மனசையும் தடுமாடச் செய்யும். மாம்பழம் காவலுக்கு அவள்தான் தோட்டத்திலிருப்பாள், கட்டாரித் தேவனுக்கு அவளோடு பேசுவதில் தனி இன்பம். மஞ்சள் பூசிய முகத்தில் துலாம்பரமாய் விளங்கும்: (வெற்றிலைக் காவி உதடுகளில் புன்னகை பூக்க, யாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசுவாள் இசக்கி. வலுக்கு தேவ னு கத்தி இசக்கியிடம் பழகிய நாளிலிருந்தே கட்டாரித். தேவனின் மனம் அவள் உடம்பில் லயித்தது. என்றைக் காவது ஒரு நாள் இசக்கியை அனுபவித்துத் தானாசு- வேண்டும் என்ற பேயாசை அவனை , உலுப்பி வந்தது . கட்டாரி எதற்கும் துணிந்தவன். எனினும் மானாபிமானத் துக்குப் பயந்து நடப்பவன் . ஆதலால், அவளிடம் எப்போதும் ஒரு முழம் தள்ளியே பழகி வந்தான். கல்யாண 26ானவள் தான். எனினும், மனசில் எழும் குரூர ஆசையை அவளுல் (கொல்ல முடியவில்லை. ஆசையை மறப்பதற் காக, சாராயத்தை அதிகம் குடித்தான், சாராயக். சடையை விட்டு வெளியேறியவுடன், “'இவளா மாந். தோப்புக்குக் காவல் இருக்கது? இலளே சாதி மாம்பளம் மாதிரி இருக்காளே. உடம்பிலே அரைச் சேரு கறி" அறுத்துத் தங்கலாம் போலிருக்கு” என்று முனகிக் கொள் இவான். மனசிலும் உடம்பிலும் அத்தனை பசி. உடம்பு குறு குறுத்தால் இன்றும் ஒரு டிராம் அவன் நெஞ்சுக் குழாயை எரித்துச் செல்லும், அன்றும் அவன் கோயிலுக்குச் செல்லும்முன் நேராகக் கோயில் குளத்தான் கடைக்குத் தான் சென்றிருந்தான்.