பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுநாதன் கதைகள் பிள்ளையவர்கள் குமாரத்தி கோமதியம்மாளை செந்திலுக்கு நிச்சயம் .!ண்ணி முடித்தார். பிறகு செந்திலுக்கும் விஷ யத்தைத் தெரிவித்து தந்தி கொடுத்தார். எந்த வித மான அதிர்ச்சிக்கும் ஒரேவித உணர்ச்சி காட்டும் அவனது பத்திரப் புத்தி செந்திலை வசிய மந்திரம் போல் திரு நெல் வேலிக்கு இழுத்துச் சென்றது. அருணோதத்தில் மிதுன லக்கினத்தில் கல்யாணம் . செல்வச் சீரஞ்சீவி செந்தில் நாயகத்துக்கும், செளபாக் தீக/வ தி கோட்மதிக்கும் மாப் பிள்ளைச் சடங்கும். பெண் சடங்கும் நடந்தேறின. புரோகிதர் இருவருடைய சுண்டு விரல்களையும் பின்னிப் பிணைத்து, பட்டுத் துணியைச் சுற்ற ஆரம்பித்தார், செந்தில் இரு கரங்களையும் கவனித்தான்.

    • நல்லா புடிச்சிக்கடி, விட்டுடாதே” என்று மதி என்

காரி கோமதிக்கு ஆணையிட்டாள். அந்தப் பிணைப்பின் பிடி இழந்தால், வாழ்க்கையிலும் பிடியும் பிணைப்பும் அற்றுப் போகும் என்று சாஸ்திரம் சொல்லுகிறதாம்! அந்த இரு கரங்கள்: பட்டுப்போல் மிருதுத் தன்மை யும் பசை ஏற்று, தங்கத்தின் தகதகப்பை மெரு கேற்றிக் குளிர்வித்தது போன்ற கோமதியின் கரம், பிஞ்சு விரல்கள் ; பிஞ்சுச் சதை. சாம்பல் அகலாத தடியங்காயைப் போல் நிறம் பெற்று, முருங்கைக்காயின் முரமுரப்பும் விறைப்பும் கொண்டு, பசையற்று வெள்ளை பூத்த கரம்; செந்திலின் கரம், இந்த இரு சுரங்களும் சேர்வதா? அவன் திகைத்தான்; அவர்கள் அக்னியை வலம் வந் தார்கள், முதல் சுற்றிலேயே அவர்களது விரல்கள் பிடிப்பை அறுத்துக்கொண்டன.