பக்கம்:ரமண மகரிஷி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. இரமண மகரிஷி என்ற
பெயரைச் சூட்டியது யார்?

திருவண்ணாமலை நகரைச் சூழ்ந்துள்ள அருணாசலம் மலையில், சத்குரு சாமி குகை, விரூபாட்சி குகை, ஸ்காந்தா சிரமம் என்ற இடங்கள் உள்ளன. அவை யாவும் யோகிகள் அமைதியான சூழலில் தியானங்கள் செய்வதற்கு ஏற்ற இடங்களாகும்.

பாலயோகி வெங்கட்ராமன், தனது தாயார் ஊருக்குச் சென்ற பிறகு இந்த மூன்று மலைக் குகைகளிலும் கால தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு மாறி மாறித் தங்கிப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இந்த இடங்களில் விரூபாட்சி என்ற குகை வெங்கட்ராம சுவாமிக்கு மிகவும் பிடித்த இடம். இங்கே அவரது தொண்டரான, பழனிசாமி சாமியாரோடு அவர் அடிக்கடி சென்று தங்குவார்.

அந்த இடத்துக்கு ஏராளமான ஆன்மிக அன்பர்கள் வருகை தந்து, அவருக்குரிய பால் பழ வகைகளை வழங்கி அருளாசி பெறுவார்கள். திருவண்ணாமலை பாதாளக் குகையில் இருந்த பழு பூச்சிகள், வண்டுகள், வௌவால்கள், பாம்பு, தேள்கள். துரிஞ்சல்களின் அசுத்த நாற்ற வகைகள் இங்கேயும் அதிகமாக இருந்தன. இருந்தாலும், அந்த இளம் துறவி அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

ஒருமுறை தேள் கடித்தது. அதைத் தடவிக் கொடுத்துக் கொண்டாரே தவிர, அதற்காக அவர் சிகிச்சையேதும் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/71&oldid=1281212" இலிருந்து மீள்விக்கப்பட்டது