பக்கம்:ரமண மகரிஷி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ரமண மகரிஷி



“நான் இப்போது உணர்வுடன் இருக்கிறேன். நான் நகருகிறேன். சிந்தனை செய்கிறேன்; ஆகையால், நான் இருப்பதை உணர்கிறேன்.”

“திருவண்ணாமலையில் நீ படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறபோதும் கூட, உனது உடல் நகர்ந்து கொண்டும், சிந்தனை செய்து கொண்டும், பல இடங்களில் சுற்றிக் கொண்டும் இருப்பதை, நீ பார்க்கிறாய்-இல்லையா?”

“இது மர்மமாக இருக்கிறது. நான் என்றும் உள்ளவன்-இருக்கிறேன் என்றும், என்னுடையதுதான் என்னும் பெருமை மட்டும் மாறுவதாகச் சொல்லலாமா?”

“அப்படியானால், நீ இரண்டு ஆட்களாக இருப்பதாய் நினைக்கிறாய். அப்படி இருப்பது முடியக் கூடிய காரியமா? நம்பக் கூடிய சம்பவமா?”

“அவ்வாறானால், எனக்குக் கருணை கூர்ந்து உண்மைக்கு வழி காட்டுங்கள்.”

சினிமா, நிழற்படம் காண்பிக்கப்படும் திரை போல உண்மை என்றும் அழிவில்லாதது. படங்கள் அதில் காட்டப்படும் போது, மறைந்து இருக்கிறது. படம் நிறுத்தப்பட்ட பிறகு, அங்கிருந்த உண்மைப் பொருளான திரை நன்றாகத் தெரிகிறது. அதுபோல, மனிதர்கள், எண்ணங்கள், பொருட்கள், நிகழ்ச்சிகள் எல்லாமே படங்கள்தான். அவை சுத்தமான உணர்வென்னம் திரையில் ஓடும் உருவங்களும் நிகழ்ச்சிகளும் மறைந்துபோகும். உணர்வு மட்டுமே மிஞ்சி என்றைக்கும் இருக்கும். என்ன புரிந்ததா? அல்லது மீண்டும் ஏதாவது சந்தேகம் வருகின்றதா?”

“புரிந்தது சுவாமி; உணர்ந்து கொண்டேன் உண்மையை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/88&oldid=1281329" இலிருந்து மீள்விக்கப்பட்டது