பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

ஸ்ரீமதார்த்திபிரபந்த தனியன்கள். தேன்பயிலுந்தாரானெதிராசன் சேவடிமேல் தான்பரம்பத்திதலையெடுத்து - மாந்தர்க் குணவாக வார்த்தியுடனொண்டமிழ்கள் செய்தான் மணவாளமாமுனிவன்வந்து. உரை - மணவாள மாமுனிவன் = பெரிய ஜீயர், வந்து = திருவவத் ரித்து, தேன் = மகரந்தத்தை, பயிலும் = ஸ்ரவியாகின்ற, தாரான் = புஷ்ப மாலையை தரித்து, எதிராசன் = எம்பெருமானாருடைய, சேவடிமேல் = சிவந்த திருவடித்தாமரைகளின் விஷயமாய், தான் = தனக்கு, பரமபத்தி = பரமபக்தி, தலையெடுத்து = தலையெடுப்பினாலே, மாந்தர்க்கு = அஜ்ஞ ருக்கு, உணவாக = அறிவு விளையும் படியாக, (போக்ய மாக) ஆர்த்தியுடன் = ப்ரீதிபுரஸ் ஸரமான துக்கத்தோடு, ஒண் = போக்யமான, தமிழ்கள் = தி ரவிடவாக்யங்களைக் கூட்டி, செய்தான் = ஆர்த்தியென்கிற இப்பிரபந்தத் தையருளிச் செய்தனர். வம்பவிழ்த்தார்வண்மை மணவாள மாமுனிவன் அம்புவியிற்கால் பொருந்தாவார்த்தியினால் - உம்பர் தொழும் விண்ணுலகிற்செல்ல விரைந்தெதிராசன் பதங்கள் நண்ணியுரைத்தான் நமக்கு. உரை. = வம்பவிழ் = அப்போதலர்ந்த, தார் = புஷ்பமாலை யாலே அலங்கரிக்கப்பட்ட, வண்மை = ஒள தார்ய சீலரான, மணவாள மாமுனி வன் = பெரியஜீயர், அம் = அழகிய, புவியில் = பூமியில், கால் = திரு வடிகள், பொருந்தா = பொருந்தாத, ஆர்த்தியினால் = துக்கத்தினால், உம் பர் = நித்பலாரிகளாலே, தொழும் = ஸேவிக்கப்படுகிற, விண்ணுலகில் = பரமபதத்துக்கு, செல்ல = எழுந்தருளும் பொருட்டு, விரைந்து = த்வரைப் பட்டு, எதிராசன் = எம்பெருமானாருடைய, பதங்கள் - திருவடிகளை, ந ண்ணிக் அத்யவஸித்து, நமக்கு = அஸ்மதா திகளுக்கு, உரைத்தான் = அ குளிச்செய்தனர். ஜீபர் திருவடிகளே சரணம்.