பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்புகள்

அவருடைய எழுத்துக்கள் அனைத்தையும் விவரிக்கும் ஒரு அட்ட வன கூட இச் சிறு புத்தகத்திற்குள் அடங்காதது ஆகிவிடும். நாம் அவரது இலக்கியப் படைப்புகளை, சுயசிருஷ்டிகள் மற்றும் விமர்சனரீதியானவைகளை, மட்டும் மேலோட்டமாகக் கவனிப் போம். இலக்கியம் என்பது, அதன் பரந்த பொருளில், மனிதர்கள் பற்றிய பலவற்றையும் தன்னுள் கொண்டதாகும். போகிற போக்கில், தத்துவம், வரலாறு, சமூக இயல் முதலியவை தொடர்பானவை மீதும் சிறிது கவனம் செலுத்துவோம். அவர் 1927 முதல், அவருடைய முப்பத்து நான்காவது வயதில், எழுதத் தொடங்கினர். 1961-ல், கடுமையான நோய்வாய்ப்படுகிற வரை எழுதிக்கொண்டிருந்தார். அவர், ஏறக்குறைய ஒரு கடிகாரம் மாதிரி, தனது எழுத்து வேலைகளில் ஒழுங்காகச் செயலாற்றினர்' என்று பிரகாஷ் சந்திர குப்தா எழுதினர். இப்படி உழைத்ததில், இந்த 34 வருடங்களில், ராகுல் 50,000 பக்கங்கள் பிரசுரித்திருக் கிரு.ர். பன்னிரண்டு கையெழுத்துப் பிரதிகள் பிரசுரமாகாமல் இருக்கின்றன. இது பாராட்டுதலுக்கு உரிய ஒரு சாதனைதான். அயல் நாடுகளுக்கு ஆபத்தான பயணங்கள் செய்த நாட்கள், அவர் வெளி நாடுகளில் தங்கிய வருடங்கள், சிறையில் மோசமான திலேமைகளில் அவர் கழிக்க நேரிட்ட காலம் இவற்றை எல்லாம் கருதுகிறபோது, இச்சாதனை மிகப் பெரிதேயாகும். சதா ஊர் சுற்றிக்கொண்டிருந்த ஒருவரின் இத்தகைய பரந்த எழுத்துக் களின் தன்மை வியப்பை அளிக்கக்கூடியதே. அவர் மிக வேகமாக வும், சோர்வில்லாமலும் எழுதக்கூடிய எழுத்தாளர். எழுது வதற்குத் தகுந்த மனநிலை அல்லது வசதியான சூழ்நிலைகள் தேவை என்து அவர் ஒருபோதும் காத்திருந்ததில்லை. ரயிலில் அல்லது கப்பலில் போகிறபோதும், பஸ் நிலையங்களிலும், சத்திரம் சாவடி களிலும், முகாம்களிலும், வீட்டிலும், சஞ்சாரங்களின்போதும் அவர் எழுதிஞர்.

கற்பனைப் படைப்புகள் -

கற்பனைப் படைப்பு என்ற இனத்தில் சேரக்கூடிய பதின்மூன்று புத்தகங்களை ராகுல் எழுதிஞர். சிம்க சேனபதி, ஜெய் யெளதேவா