பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய சாதனைகள்

ராகுலின் ஆளுமையும் சாதனைகளும் பன்முகமானவை, பல்வேறு தன்மைகள் கொண்டவை. எனவே, அவருடைய அரசியல் எழுத்துக்கள், அல்லது மொழிஇயல் சிந்தன, அல்லது சமூகத் தீவிரவாதம் (இந்துக்கள் மாட்டிறைச்சி சாப்பிடவேண்டும் என்று அவர் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். வைதிக இந்துமத வாதிகள் நிறைந்த கூட்டம் ஒன்றில் அவர்மீது கற்கள் வீசப் பட்டன) போன்ற விவாதத்துக்கு உரிய விஷயங்களில் இறங்காமல் இந்தி இலக்கியத்துக்கு அவர் செய்துள்ள சாதனைகளை மட்டும் நமது கவனத்துக்கு உரியதாகக் கொள்வதே நல்லது. இந்த அத்தி யாயத்தில், அவருடைய எழுத்துக்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டி, அவரது எழுத்துக்களின் நடை, மற்றும் சிந்தனை ஒட்டம் ஆகியவற்றின் மீது ஒரு நோட்டம் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவருடைய சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும், ஒவ் வொரு திசையிலும் இழுக்கிற இரண்டு நேர்மாருன போக்குகளின் கலவையும் சமன்பாடும் இருந்தது. அவர் மரபுரீதியான பிராமணிய மனப்பண்பு பெற்றிருந்தார்; அதற்கு எதிராக அவர் புத்த சமயத் திடம் ஆழ்ந்த பற்றுதலும் கொண்டிருந்தார். அவரது வைதீகம் மற்றும் பல கடவுள் வழிபாட்டுக் கொள்கைக்கு மாருக ஆரிய சமாஜத்தின்மீது கொண்ட ஆர்வமும், விக்கிரக ஆராதனை எதிர்ப்பும், வேதங்கள் காட்டும் சான்றுகளின் முடிவில் நம்பிக்கை யும் அமைந்திருந்தன. பின்னர் அதை அவர் விலக்கித்தள்ளிஞர். காவிய சம்ஸ்கிருதத்தையும் அரபு மொழியையும் அவர் பண்டிதர் களிடமும் மெளல்விகளிடமும் கற்ருர்; பாலி மொழியை இந்தியா, இலங்கை, நேபாளம், திபெத்தில் வசித்த புத்த சந்தியாசிகளிடம் கற்றறிந்தார்; எனினும், அந்தப் புராதன இலக்கணவாதிகள் மற்றும் சூத்திரக்காரர்களின் வார்ப்புகளில் தன் மனம் ஒடுங்கிப் போகாதபடி அவர் அதன் சுயேச்சைப் பண்பைக் காப்பாற்றி வந்தார். மாருக, எழுதப் படிக்கத் தெரியாத சாதாரண மக்களும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பேசிய சிதைந்த மொழிகளை அவர் தீவிரமாக ஆதரித்தார். அவர் பிரக்ஞைபூர்வமாகத் தனது