பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ராகுல் சாங்கிருத்யாயன்

நூல்கள் முதல், புத்தமத தர்க்கம்பற்றி தர்மகீர்த்தி எழுதிய நூலுக்கு விளக்கவுரை போன்ற ஆழ்ந்த, மதிப்பு வாய்ந்த விஷ யங்கள் அவற்றில் காணப்படுகின்றன. அவரது இலக்கிய சாதனை யின் தன்மையும் ஒரே மாதிரியானது அல்ல. அசாதாரணப் பண்டிதரும், அயர்விலாது சுற்றித்திரிபவரும், சமூக சீர்திருத்த வாதியுமான இந்த மனிதரின் மொத்தப் படைப்புகளும் முதலில் பெரும் திகைப்பையே ஏற்படுத்தும். முறையான படிப்பு பெற்றி ராத ஒருவர், அமர்ந்து வேலை செய்வதற்கென நிலையான ஒரு இடம் இல்லாதவர், பெயர்களையும் மதப் பற்றுக்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தவர், அறிவை, தலையை அழுத்தும் சுமை யாகக் கொள்ளாது, சிறு பயணத்துக்குப் பயன்படுத்துகிற ஒரு படகுபோல் கருதியவர்-இது புத்தரின் வாசகங்களில் ஒன்று; இதைத் தனது வழிகாட்டும் ஒருகொள்கை என அவர் தன்னுடைய சரிதையில் குறிப்பிடுகிமுர்-பன்மொழிப் புலவரும் உலக யாத்திரி கருமான அவர், எப்படி இவ்வளவு எழுத முடிந்தது என்று நம்மை அதிசயிக்க வைக்கிறது. அதிலும், திபெத் போன்ற தடை விதிக் கப்பட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட கடினப் பயணங்கள் தந்த சிரமங்கள், மற்றும் தேசிய விடுதலை இயக்க அரசியல் போராட்டத் தில் ஈடுபட்டு அனுபவித்த சிறைத் தண்டனைகள் இவற்றுக்கிடையி லும் அவர் இதை சாதித்திருக்கிருர், சுய முயற்சியால் முன்னுக்கு வந்த இந்த மனிதரைப்பற்றி மேலும் மேலும் அறிகிறபோது, அவருடைய அறிவுக்கூர்மை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்தி, புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம், விவேகபூர்வமான சுதந்திரப்போக்கு ஆகியவற்றை நாம் அதிகம் வியக்க நேர்கிறது. சோர்வின்மையும் துணிச்சலும் பெற்ற ஒரு முன்னேடி தீவிரமான ஞாபகமறதி நோய்க்கு உட்பட்டு இறந்தார் என்பது பரிதாபத்துக் குரியது. அவர் 1983-ல் இறந்துவிட்ட பிறகுகூட அவரைப்பற்றி அதிகமாக எதுவும் எழுதப்படவில்லை. அச்சந்தர்ப்பத்தில் உணர்ச்சி மயமான இரங்கல் குறிப்புகள்தான் வெளிவந்தன. பரோடா பல்கலைக் கழகத்தின் காலாண்டு வெளியீட்டில் டாக்டர் வாசுதேவசரண் அகர்வால் எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரை ஒன்று மட்டுமே குறிப்பிடத் தகுந்தது ஆகும்.

ராகுலின் ஆளுமையும், அவரது சாதனைகள் போலவே, மனதில் பதியக்கூடியது; மறக்கமுடியாதது. விலைமதிப்பிற்குரிய எழுத்திப் பிரதிகள், ஒவியங்கள், மற்றும் அபூர்வ நூல்களோடு திபெத்திலிருந்து ராகுல் திரும்பிவந்த சமயம், பிரசித்திபெற்ற வரலாற்று ஆசிரியரான காலம்சென்ற காசிபிரசாத் ஜெய்ஸ்வால் அவரைப்பற்றி "மாடர்ன் ரெவ்யூ"வில் ஒரு கட்டுரை எழுதினர். அதில் அவர் ராகுலை, அவரது தோற்றப் பொலிவைப் பொறுத்த ட்டில், புத்தரோடு ஒப்பிட்டார். "அவர் ஆறு அடி உயரம்