பக்கம்:ராஜாம்பாள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு 179

விடவேண்டியது. இல்லாவிட்டால் குற்றஞ் செய்தவர் களை நீ மறைக்கப் பார்த்தாயென்று உன்மேலும் குற்றம் ஏற்படும். மேலும் நீ சொல்லாவிட்டாலும் அங்கே இருந்தது யாரென்று எங்களுக்குத் தெரியாதென்று நீ எண்ணுவது புத்தியினம். பூமிக்குள் இருக்கும் அறையில் தண்ணிரில் மூழ்கியிருந்த உன்னைக் கண்டுபிடித்த கோவிந் தனுக்கு இது ஒரு கஷ்டமா? மேலும் நாங்கள் எல்லோ ரும் நீ இறந்து போய்விட்டாயென்று எண்ணி உன்னைக் கொன்றது யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் விழித் துக்கொண் டிருக்கையில் நீ உயிருடன் இருக்கிருயென் பதை அறிந்து தேடிக் கண்டுபிடித்திருக்கும்போது முன் ஞல் நடந்த சமாசாரங்களேயெல்லாம் கூட இருந்து பார்த் ததைப்போல் அறியாவிட்டால் எப்படிப் பின்னல் நடந்த சங்கதிகளை அறியக்கூடும்? ஆகையால் நீ பந்து என்ற தாட்சிண்யத்தால் சொல்லாவிட்டாலும் கொஞ்ச நேரத் திற்குள் இன்னரென்ற சங்கதி வெளிக்கு வந்துவிடும். ஆகையால் நீ சொல்லிவிடுவதே உத்தமம்.

இராஜாம்பாள்: நான் கூடச் சேர்ந்து மறைக்கப் பார்த்தேன் என்ற குற்றம் என்மேல் ஏற்பட்டாலும் அங்கே இருந்தது இன்னரென்று நான் சொல்லமாட்டேன்.

துரைசாமி ஐயங்கார்: கனம் பொருந்திய நியாயாதிபதி யவர்களே! கோபாலன் கொன்றானென்ற ராஜாம்பாளே உயிருடன் வந்துவிட்டதால், கோபாலன்பேரில் இருக்கும் குற்றம் நீங்கிவிட்டது. அதுவும் போதாதென்றால் ராஜாம் பாள் சொன்ன விருத்தாந்தங்களிலிருந்து கோபாலன் பன்னிரண்டு மணிக்கு அந்த இடத்திற்கே வரவில்லை என்று பரிஷ்காரமாய் ஏற்படுகிறது. கொலைசெய்தவர் கள் இன்னரென்றும் கொலை செய்யப்பட்ட பெண் இன்ன ரென்றும் கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் கியாதிபெற்ற இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு அவர்களுடைய வேலை. கோபாலன் குற்றவாளியா குற்றவாளியல்லவா என்று ஜூரர்கள் கண்டுபிடிக்க வேண்டிய பிரமேயம் இல்லா விட்டாலும் மாமூலாய்க் கேட்பதுபோல் அவர்களைக் கேட்டுக் கோபாலனை விடுதலை செய்யவேண்டியது தங்கள் 35– G L ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/183&oldid=684725" இலிருந்து மீள்விக்கப்பட்டது