பக்கம்:ராஜாம்பாள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கல்யாணம்

அப்பொழுது, அவசரம், உடனே கோபாலன் கையில் கொடுப்பது என்று எழுதிய கடிதம் ஒன்றை ஒருவன் கொண்டு வந்து கொடுத்தான். அதைக் கோபாலன் எல்லோருக்கும் கேட்கும்படி வாசித்தான்.

என் பிரியமுள்ள கோபாலா ராஜாம்பாள்! என்னே நீங்கள் உயிருடன் பார்க்க விரும்பினுல் இக் கடிதம் கண்டவுடனே புறப்பட்டு வரவும். தாமதித்து வந்தால் என் பிரேதத்தைத்தான் பார்ப்பீர்கள். என் அக்திய காலத்தில் உங்களிடம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுப் பிராணனேவிட விரும்பும் அபரக்கியவதி லோக சுந்தரி, -

என்ன சமாசாரமென்று கடிதம் கொண்டுவந்தவனேக் கேட்டதில் லோகசுந்தரி விஷம் சாப்பிட்டதாகவும் கொஞ்ச் நேரத்தில் இறந்து போவாளென்று டாக்டர் சொன்னதாகவும் சொன்னன். -

உடனே கோபாலனும் ராஜாம்பாளும் போய் லோக சுந்தரியைச் சந்தித்தார்கள்.

லோகசுந்தரி அவர்களே வருத்தப்படவேண்டா மென்று சொல்லி தனக்குக் கோபலன் பேரிலிருக்கும் பிரியத்தால்தான் இவ்வளவும் செய்ததாகவும் சகலமும் மாஜிஸ்டிரேட்டிடம் ஒப்புக்கொண்டதாகவும் தன் சொத்துப் பூராவையும் அவர்கள் இருவர் பேருக்கும் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னவுடனே கோபாலன்பேரில் ஒரு கையும் ராஜாம்பாள் பேரில் ஒரு கையும் வைத்தபடியே அவர்கள் இருவரும் சுகமாக வாழ வேண்டுமென்று சொன்ன உடனே லோகசுந்தரியின் பிராணன் போய்விட்டது.

உடனே பக்கத்திலிருந்த டாக்டர் பிரேதத்தை மெது வாகப் படுக்க வைத்துவிட்டு அவர்களே வீட்டிற்குப் போகச் சொன்ஞர். அவர்கள் மிகவும் வருத்தத்துடன் போய் அங்கிருந்தவர்களுக்குச் சம்ாசாரம் தெரிவித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/199&oldid=684741" இலிருந்து மீள்விக்கப்பட்டது