பக்கம்:ராஜாம்பாள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோஸ்யத் தரகர்கள் 33.

ராமண்ணு: கடிக்க வரும் நாய்க்குக் கருப்புக் கட்டி போட்டால்தானே அது சும்மாயிருக்கும்? அதைப்போல் அந்த ஜோஸ்ய நாய்களுக்கு முதலில் ரூபாய் கொடுத்து விட்டால், தாங்கள் சொன்னபடியே ஆடுவார்கள்.

நீலமேக சாஸ்திரி: நான் பின்னல் கொடுப்பேனே இல்லையோ என்று முதலில் கொடுக்கச் சொல்லுகிறீர். அப்படியே கொடுத்துவிடுகிறேன். இதோ செக் எழுதிக் டு காடுக்கிறேன்; வாங்கிக்கொண்டுபோம்.

ராமண்ணு : எனக்குச் செக்கும் வேண்டாம்; நோட் டும் வேண்டாம். சவரன்களாய் மாற்றிக் கொடுக்க உத்தர வாகட்டும். - -

நீலமேக சாஸ்திரி லஞ்சம் வாங்குவது சவரன்களா தலால் தம் இரும்புப் பெட்டியைத் திறந்து அந்தத் தொகையை உடனே கொடுத்து அனுப்பிவிட்டார். ராமண்ணு தாம் அன்று விழித்த முகம் நல்ல முகமென் தும், இப்படியே வருஷத்திற்கு இரண்டொரு முறை யாவது இப்பேர்ப்பட்ட வியாபாரம் நடக்கும்படி ஈசன் அருள்புரிய வேண்டுமென்றும் பிரார்த்தித்துக்கொண்டே வீட்டிற்குப் போய்ச் சவரன்களை எல்லாம் பத்திரமாய் வைத்துவிட்டு இருநூறு ரூபாய் எடுத்துக்கொண்டு போய் ஜோஸ்யர்கள் இருவருக்குங் கொடுத்து, வேண்டிய ஏற்பாடு செய்துவிட்டார். மறுநாள் சாமிநாத சாஸ்திரி ஜோஸ்யர்களே அழைத்துவரும்படி செய்து கோபால னுடைய ஜாதகத்தையும் இராஜாம்பாளுடைய ஜாதகத் தையும் கொடுத்துச் சரியாய்ப் பார்த்து யாதொன்றும் ஒளிக்காமற் சொல்லவேண்டுமென்று சொன்னர். அவர் கள் இரண்டு மூன்று மணி நேரம் பரல்போட்டு, லக்கின ஸ்புடம் முதலியவைகளே யெல்லாம் செய்து பார்த்து ஒன்றும் சொல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த் துக்கொண் டிருந்தார்கள். இப்படியிருக்குந் தருணத்தில் ராமண்ணுவும் திருப்தியாய்ப் பிராம்மணுர்த்தம் சாப் பிட்டுவிட்டு, சாப்பிட்ட அலுப்புத் தீரும்படி பெருமாள் கோவிலிலுள்ள கல்மண்டபத்தில் இரண்டு நாழிகையாய்ப் படுத்து இப்படியும் அப்படியும் புரண்டுவிட்டுச் சாமி நாத சாஸ்திரி வீடு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட வுடனே சாமிநாத சாஸ்திரி அவருக்கு ஆசனமளித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/35&oldid=677401" இலிருந்து மீள்விக்கப்பட்டது