உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 ஞான: உனக்கு வேலை கிடைச்சதே நான் சாப்பிட்ட மாதிரிதாம்மா! ராணி: சரி. வாங்கப்பா! [ராஜா வருகிறான்.) கீதா வாங்க...வாங்க! ராஜா: பாபு இல்லே? தாயம்மாள்: வந்துடுவாரு. வாங்க தம்பீ. வாங்க.உக் காருங்க. இப்பத்தான் உங்களைப் பத்தி பேசிக்கிட்டே இருந் தோம்! ராஜா: என்னைப் பத்தியா? தாயம்: ஆமாங்க. ராஜா: என்ன? கீதா; அன்னைக்கு நாடகத்திலே உங்க நடிப்பு ரொம்ப பிரமாதம் -நானே உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்! ராஜா: ஹ... ஹ... தேங்க்ஸ்! தாயம்: கீதா 'போர்ஷளை'த்தான் ரொம்ப குறைச்சிட்டிங் களே தம்பி. உம்... ஒரு சீனுகூட முழுசா இல்லையே! ராஜா: நான்என்னசெய்யறது? அதுக்கெல்லாம் பொறுப்பு பாபுதான். உம்... கதையும் அதுமாதிரி! பரவாயில்லை, அடுத்த புது நாடகத்திலே .. வேலைக்கார சிறுமி பிரேமா: புதுநாடகத்துலே எனக்குக் கூட ஒரு சான்ஸ் கிடைக்குமா? ராஜா: ஆங் - கீதா: சீ. போடி! பாத்தியாம்மா இந்தப் பொடிசை! சான்ஸ் கிடைக்கலியாம் - இவளுக்கு சான் உம்- எனக்கே சாமில் சான்ஸ்! தாயம்: பிரேமா! வாயை மூடு! அதுக சின்னஞ் சிறிசுக தமாஷா பேசிக்கிட்டு இருக்கும்போது - இதை, தம்பியை மாடி க்கு அழைச்சிட்டுப் போறதுதானே! ராஜா: அய்யோ, வேண்டாம்! நான் இங்கேயே இருக் கேன்! தாயம்: சரி ) வாடி, போவோம்! தாயம்மாளும் பிரேமாவும் போய் விடுகிறார்கள்.] கீதா: புது நாடகம்னா எதுவா இருக்கலாம்? ராஜா: பாபு உங்ககிட்டே சொல்லலே? ரேண்டு மூணை கதையிருக்கு! லைலாமஜ்னு, அனார்கள், அகல்யா தேவி... கீதா கம்ப்வீட் லௌல் ஸ்டோரியா இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும் நம்ப ரெண்டுபேரும் காதலனும் காதலியா ஒரு 'புல்' நாடகத்திலே நடிக்கணும் எனக்கு ரொம்ப ஆசையாயிருக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/31&oldid=1713802" இலிருந்து மீள்விக்கப்பட்டது