பக்கம்:ரூபாவதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 95

மலேயிலே தங்களோடு கடந்த சண்டையிலே தோத்துப்போன நம்ம சற்குணவளுதியும் படையெடுத்துக்கிட்டு வந்து இந்த ஆருக்குக் காதவளித்துராத்திலே தங்கியிருக்காகளாம். இன்னிக்குப் பொளு தமறையும் வேளைக்குள்ளே இங்வனே வந்திடுவர்களாம். பலத்த சேனேயோடுவந்திருக்காகளாம். மகாராசா இவைகளையெல்லாம் பாத்துக் கிட்டிருந்த பக்கத்துனர்க் குடியானவன் ஒருத்தன் மேல் மூச்சுக் கீள்மூச்சு வாங்கிக்கிட்டு வெகு அவசரமாய் ஒடியாந்து சொல்லிட்டுப் போனன். இதுகேட்டது முதல் என்காலுக அங் கனே தரிக்கலே மகராசா அதுதான் இங்ானே பெசமான்களிடத் திலே சொல்லிட்டுப் போலாமிண்டு வந்தேன். சுசீலன்:-சரிதான். முன்னுெரு காலத்துக் காடு வேட்டிய சோழ மகாராஜா வத்து தங்கியிருந்த சோழன் வந்தான் என்னும் கிராமத்திற்குச் சமீ பத்திலே இவர்கள் வந்து தங்கியிருக்கின்ருர்கள் போலும்! முருகன்:-ஆமாம். அப்படித்தான் சொன்னன். மகாாசா சூரசேகன்:-ஹ-ம் (பெருமூச்செறிந்து கொண்டு) சரிதான். முருகா! போ. (முருகன் போகின்றன்.) கேட்டீரோ சுசீலரே சமாசாரத்தை சகலமும் நமக்குக் கெடுதலா கவே நடந்துவருகின்றன! பார்த்திரா கருஆர் போன சேவகனே இன்னும் வரவில்லை. பாண்டியனும் சோழனுமோ படையெடுத்து வந்துவிட்டார்கள்! இதற்கென்ன செய்யலாம்? சுசீலன்:-கருவூருக்குப் போன சேவகனும் வருகிற சமயங்தான். பகருதிருங் கள். வந்துவிடுவான். இது கிடக்கட்டும். நம்முடைய சேனைகளெல் லாம் இப்போது ஆயத்தமா யிருக்கின்றனவே பல்லவோ? சூரசேகன்:-ஆம். அது மூன்று நாளைக்கு முன்னேயே ஆயத்தமாயிருக்கின் றது. ஆயினும் அதுகொண்டு நாம் யுத்தக்தொடங்குவது சரியன்று. அப்படியன்றிப் போர்செய்யத் தொடங்கினேமோ தோல்வி யடை வது நிச்சயம். முன் சற்குணவழுதியுடன் திருப்பரங் குன்றத் தருகே நாம் புரிந்தபோரில் வெகுகஷ்டத்தின் மேலன்ருே நாம் வெற்றிபெற்றது? அதுவுங் கருவூர்ச்சேனையுஞ் சேர்கிருக்கபோகன் ருே அப்படியிருக்க நாம் கருவூரிலிருந்து சேன வருமுன் யுத்த மாரம்பிப்பது யுக்தமன்று. அஃது இப்பொழுதே வருமாயின் இந்த நிமிஷயத்திலேயே போர் தொடங்குவோம். அதற்குக் தடை யொன்றுமில்லை. சுசீலன்:-போர் என்னவோ வந்துவிட்டது. நாம் இனிமேற் சும்மா இருக் கக்கூடாது. ஆகையால் நகர் முழுவதுஞ் சனங்களறியும்படி பறை யறைய உத்தரவு செய்யவேண்டும். எதிரிகளுக்கு நாம் பயந்தவர் களாகக் காட்டிக்கொள்ளல் கூடாது. ஆகையாற் போர்முரசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/96&oldid=657136" இலிருந்து மீள்விக்கப்பட்டது