பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

м *ತಣ್ಣ 受,哆 够 ~ : * ---- ஆபத்திலிருந்து காப்பாற்றவேண்டாமா? திடீரென்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே, காலில் அடிபட்டு ந்ொண்டுவது போலப் பாசாங்கு செய்தது. மெல்ல மெல்ல நடந்தது. வேடன் இதைக் கவனித்தான். வலையில் மாட்டிக் கொண்டதால் மான் களைத்துப்போய் ஓடமுடியாமல் தவிக் கிறது’ என்று நினைத்தான். கையிலே கத்தியை எடுத்துக் கொண்டு அதைப் பிடிக்க ஓடினன். ரோகந்தா இதுவரை தடுமாறியதுபோல் நடந்தாலும் வேடனுக்கு அகப்படாதபடி இங்குமங்குமாக ஓடி, அவனைக் காட்டுக்குள் இழுத்துச் சென்று விட்டது. அவனே ஏமாற்றிவிட்டு, அவனுக்குத் தெரியாமல் வேறு ஒரு வழியாகக் குட்டைக்குத் திரும்பிவந்தது. தன் கொம்புகள்ால் ஆமை இருந்த பையை இழுத்துத் தரையில் போட்டது. பையைக் கிழித்து, ஆமையை விடுவித்தது. நன்றியுடன் ஆமை குட்டைக்குள் ஒடி மறைந்தது.