பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கு மன்னன் நந்திரியா முன்னெரு காலத்தில் மத்திய இந்தியக் காட்டுப்பகுதியில் ஒரு குரங்குக் கூட்டம் வசித்துவந்தது. அங்கே ஒரு குட்டிக்குரங்கு பிறந்தது. நந்திரியா என்பது அதன் பெயர். இளமையிலே அதற்கு இரக்க குணம் இருந்தது. ஆலுைம், துணிச்சல் அதிகம். காடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அதற்கு ஆசை. 筠 பெரியவனுகி அநுபவம் பெறும்வரை கூட்டத்துடனே இருக்க வேண்டும். தனியே சுற்றக் கூடாது. மீறினல் ஆபத்து: என்று அதன் பெற்ருேர் எச்சரித்தார்கள். பெற்ருேர் சொற்படி அது சில நாட்கள்தான் நடக்கும். பல நாட்கள், வீர தீரமாக விளங்கவேண்டும்’ என்ற ஆசையில் கூட்ட த்தை விட்டு விலகி மனம் போனபடி சுற்றும். ஆலுைம், இருட்டுவதற்குள் திரும்பிவந்துவிடும்.