பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக்கொண்டே இருந்தன. ஆனால், இளம் குரங்குகளோ பழமரத் தீவுக்குப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டன. தீவுக்குப் போவது என்று குரங்குக் கூட்டம் முடிவுசெய்த போது கோடைக் காலம் வந்துவிட்டது, அது ஒரு விதத்தில் வசதியாக இருந்தது. ஏனென்ருல், நீரோடை பெரும்பாலும் வற்றிப் போய், பல பாறைகள் நீர் மட்டத்துக்கு மேல் தெரிந் தன. பாறைக்குப் பாறை தாவி, குட்டிகளும் கூட ஓடையை எளிதாகக் கடந்தன. தீவை அடைந்ததும், சந்தேகப்பட்ட முதிய குரங்குகள் கூட, அது ஓர் அற்புதமான இடம்தான் என்பதை ஒப்புக்கொண்டன. ஆனல், பெரிய ஆபத்து ஒன்று அவைகளுக்கு வா இருந்தது! கோடையில் வெப்பம் அதிகமாக ஆக, தொண்டை வரண்டது. தாகத்தைத் தீர்த்துக்கொள்ளக் குரங்குகள் அடிக்கடி நீரோடைக்கு வந்தன. ஆனால், நீரோடையும் வெகு சீக்கிரமாக வற்றிக் கொண்டிருந்தது. ஒரே தொடர்ச்சி யாக ஓடிக்கொண்டிருந்த ஒடைநீர், சிறு சிறு குட்டைகளாகத்