பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மரம் மட்டும் கரை ஓரமாக இருந்தது. எதிர்த் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் உச்சிக் கிளை ஒன்று மிக நீளமாக, எதிர்கரையைத் தொட்டுவிடும் அளவு வளர்ந் திருந்தது. அதில் இலேயோ பழமோ இல்லே. அது ஒரு பட்டுப் போன கிளே. ஆஞ்ல், மற்ருெரு கிளே அதற்குக் கீழ்ே முளைத் திருந்தது. அதில் ஏராளமாக இலகள் இருந்தன. பூக்கும் பருவத்தில் அது பூத்துக் குலுங்கியது. இந்தக் கிளையில் பழங்கள் பழுத்தால், குரங்குக் கூட்டத் திற்கே ஆபத்து என்று நந்திரியாவுக்குத் தோன்றியது. ஏன்? பழுத்த பழங்களில் சில நீரிலே விழுந்து ஒடையில் மிதந்து போகலாம். ஓடை எங்கே போகிறதோ? ஏதேனும் ஒரு பெரிய ஆற்றிலே கலந்தால்...? ஆற்றங்கரையில் கிராமங்களும் நகரங் களும் இருக்கலாம். மாம்பழங்கள் மனிதர் கையிலே அகப் பட்டால் போதும்; எப்படியாவது அவர்கள் மாந்தோப்பைத் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். பிறகு குரங்குக் கூட்டத் தைத் துரத்தாமல் இருப்பார்களா? ஆகையால், நத்திரியா, இந்தக் கிளேயில் ஒரு சிறு பழம் பழுத்தாலும், அதை விட்டு வைக்கக்கூடாது. பறித்துத் தின்றுவிடவேண்டும்’ என்று மற்றக் குரங்குகளிடம் கூறியது. அவைகளும் அதன் சொற்படியே நடந்தன. அந்தக் கிளேயின் நுனிப் பக்கத்தில் ஒரு பெரிய எறும்புப்