பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வில்வீரர்களே அழைத்துக்கொண்டு ஒரு படகில் ஏறிப் புறப்பட்டான். அவர்கள் ஆறு பாயும் திசைக்கு எதிர்த்திசை யில் போளுர்கள். நீரோடை ஆற்றுடன் கலக்கும் இடம் வந்த தும், அதன் கரைகளில் தேடிப் பார்த்தார்கள். கடைசியில் மாந்தோப்புத் தீவைக் கண்டுபிடித்து அங்கே போய்ச் சேர்ந்து விட்டார்கள். தீவில் எங்கு பார்த்தாலும் குரங்குகளாகவே இருப்பதைக் கண்டான் அரசன். அவற்றை உடனே அங்கு வேட்டை பாடிக் கொல்ல நினைத்தான். ஆளுல், அப்போது இருட்டிக் கொண்டிருந்தது. ஆகையால், அவன் தன் வில்வீரர்களைப் பார்த்து, 'நிறையப் பழங்கள் உள்ள மரங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும். இன்று இரவு ஒரு பழம்கூடக் களவு போகக் கூடாது. நாளை விடிந்ததும் குரங்குகளே யெல்லாம் விரட்டி விடுவோம்” என்ருன். - அரசன் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் அடர்ந்து வளர்ந்திருந்தது ஒரு மரம். அதில் மறைந்திருந்த ஒரு சிறு குரங்கு இந்தப் பேச்சைக் கேட்டது. உடனே, சந்தடி சேய்யாமல் மரத்துக்கு மரம் தாவி, தீவின் ஒரு கோடிக்குச் சென்றது. அங்குதான் நந்திரியா இரவிலே படுத்திருக்கும். நடந்ததை விவரமாக எடுத்துச் சொல்லி, "என்ன செய்வது? நானே நம்மை மொத்தமாக விரட்டிவிடுவார்களே! இந்த வேட்டையில் சிலர் காயமடையலாம்; சிலர் இறந்தும் போக லாம்” என்று கவலைப்பட்டது. நந்திரியா நீண்ட நேரம் தீவிரமாக யோசனை செய்தது. பிறகு, தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. எல்லாக் குரங்குகளுச்