பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘'என் கூட்டத்தார் மீது எனக்கு மிகுந்த அன்பு. அவர் களுக்குத் துன்பம் நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று நந்திரியா மிகவும் தாழ்ந்த குரலில் கூறியது. அப்போதே அதன் ஆவி பிரிந்தது. - இந்தக் காட்சியால் அரசனின் மனம் இளகிவிட்டது. மாந்தோப்புத் தீவைத் தான் வைத்துக்கொள்ளாமல் குரங்கு களுக்கே திருப்பிக்கொடுத்துவிடுவது என்று முடிவுசெய்தான். பொழுது விடிந்ததும், தன் வீரர்களே அழைத்து, தீவுக்கும் எதிர் கரைக்கும் பலமான ஒரு மூங்கில் பாலம் கட்டச் செய் தான். எதிர்கரையிலிருந்த குரங்குகள் இதையெல்லாம் பார்த் துக்கொண்டே இருந்தன, அரசனின் நோக்கம் என்ன என்பது புரியாததால், அவை அந்தப் பாலத்தில் ஏறிச் செல்லவில்லை. ஆனால், தங்கள் தலைவன் நந்திரியாவுக்கு இறுதி மரியாதை செய்ய அரசன் ஏற்பாடு செய்வதைக் கண்ட தும் தங்களைப் போலவே அரசனும் துக்கப்படுவதை அவை உணர்ந்தன. உடனே, எல்லாமாகப் பாலத்தைக் கடந்து சென்று நந்திரியாவுக்கு இறுதி மரியாதை செலுத்தின. நந்திரியாவைப் புதைத்ததும், அந்தத் தீவிலே ஒரு நினை வுச் சின்னம் எழுப்பினுன் அரசன். அதன் அடிப்பாகத்தில் “இந்தத் தீவுக்குள் மனிதர் எவரும் நுழையக்கூடாது. இது குரங்குகளின் சரணலயம் என்ற கட்டளையை ஒரு கல்லிலே செதுக்கி வைத்தான். - - அரண்மனைத் தோட்டத்தில் நட்டுவைக்க அரசன் சில மாம்பழங்களை மட்டும் தன்னுடன் எடுத்துச் சென்ருன். அவை நன்கு வளரும்; இனிய பழங்கள் தரும். அப்பழங்கள், பெருந் தன்மை மிக்க நந்திரியாவின் தியாகத்தை அரசனுக்கு என் றென்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும் அல்லவா?