பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

ரோஜா இதழ்கள்

அவளையும் கணவனையும் பிணைத்து வைத்தபோது உள்ளுணர்வோடு செய்த சடங்குகளும், அந்தப் பிணைப்பை வலிமை வாய்ந்ததாகச் செய்திருக்குமோ?

அதிகாலையில் மதுரம் எப்போது எழுந்தாள் என்பதை மைத்ரேயி அறியவில்லை. லோகாவின் குரல் கேட்டுத்தான் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

“அவ ஹோம்ல சேர்ந்துடுவேன்னுதான் சொல்றா. ஆனா எனக்கு மனசுவரல லோகாம்மா. கண்முன் தெரிஞ்சு நல்லகுலம். ஏதோ தெரியாம கண்ணை மூடிண்டு குழியில் விழப்போயிட்டுத்து. அவளே திரும்பி வந்திருக்கறதால தப்பை உணர்ந்து திருந்திடுவ. இப்போதைக்கு இருக்கட்டும். நான் இங்கே இருக்கறதைப்பத்தி இல்லே. எனக்கு என்னிக்கும் இந்த உறவு நிலைக்கணும் லோகாம்மா, நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது, அதுக்காகவே போறேன்...”

மைத்ரேயி படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்ததை மதுரம் மாமி கவனித்திருக்க வேண்டும். பின்னால் பேச்சை மாற்றியிருக்கிறாள்.

“அது சரி. எனக்குப் புரியறது. அங்கே போனால் எல்லாம் ஒண்ணுதான். எனக்கு வீட்டிலே ஆள் சரியாக இல்லாம வெளியே போகவே அச்சமா இருக்கு” குரல் தாழ்ந்து போகிறது லோகாவுக்கு.

“அதுவும், சேதுவுக்கும் அப்பாவுக்கும் நான் பயப்படறேன். சேது எல்லாத்திலும் எதிர்த்து எதிர்த்துப் பேசறான். பாலாவுக்கோ எதை வெளியில் சொல்லலாம் சொல்லக் கூடாதுன்னே தெரியல. வரமாசம் யோகத்துக்கு வளைகாப்பு அடுக்கணும். அவள் பிரசவத்துக்கும் லண்டன்லேயே இருக்கப் போறேன்னு எழுதியிருக்கா, அப்படீன்னா நான் அங்கே போகணும்னு தோணறது. ராஜா கூட, ‘சோஷியல் வொர்க்கர்’ மகாநாடு வரது, நீதான் டெலிகேட்டாப் போக வேண்டியிருக்கும்னார். இங்கே மனிதர் யாருமில்லாம நான் எப்படிப் போறது? அவப்பாவைக் கிராமத்துக்கே போகச் சொல்லலாம்னா, அங்கே வெட்டுப்பழி குத்துப்பழி சம்பாதிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/116&oldid=1123732" இலிருந்து மீள்விக்கப்பட்டது