உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

21

“போயிருக்கேன். முன்ன ஒருக்க அண்ணன் ரேக்ளா பந்தியத்துக்கு இட்டுப் போச்சி. நாங்கல்லாம் பஸ்ஸில் ஏறி ரயில் வண்டி எல்லாம் பார்த்தோம். அண்ணன் ரேக்ளா பந்தியத்தில் பஷ்டா வந்தது. அப்ப மாலை போட்டாங்க. மிட்டாயி, கடலை உருண்டை, ஐஸ்கிரீம்... இன்னும் என்னெல்லாமோ வாங்கித் துண்ணோம். அண்ணன் பத்து ரூபா செலவு பண்ணிச்சி.”

வாழ்க்கையின் இனிமைகள் வெட்டவெளியின் மொட்டைப் பனைகளினிடையே பசைத்துள்ள திட்டுக்களைப் போன்றவை. மைத்ரேயியும் அவள் பங்கில் இம்மாதிரி இனிய ஆசைகளைச் சிறுமிப் பருவத்தில் அனுபவித்தவள்தானே? திடீரென்று உள்ளே ஜிலேபியும் மிக்ஸ்சர் பொட்டலங்களும் நினைவுக்கு வருகின்றன.

“லட்சுமி, இரு, இத வர்றேன்.”

குறுஞ் சுவருக்கப்பால் தட்டில் சோறு நீத்து ஈக்கள் மொய்க்கின்றன. நாலைந்து சுண்டெலிகள் ஜாங்கிரியை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஓடுகின்றன.

காப்பித் தம்ளரின் மீது ஒரு காகிதத் துண்டை வைத்து முடியிருந்தாள்.

காகிதம் பறந்து ஆடை படர்ந்த திரவம் தெரிகிறது.

அதையும் எலி முகர்ந்திருக்குமோ?

சே! எத்தனை ஆசையுடன் ஜாங்கிரியை தின்ன வைத்திருந்தாள்?

இந்தப் பழைய பாழ்மனையில் அயர்ந்து மறந்தால் எலியும் ஈயும் கரையானும் ஆளையே தின்றுவிடும் போலிருக்கின்றன“

ஏமாற்றத்தில் கிளர்ந்த கோபத்தில் எலிகளையும் ஈக்களையும் திட்டிக் கொண்டு ஜாங்கிரியைத் தூக்கி வந்து கொள்ளையில் வீசுகிறாள்

“ஐயையோ? ஏனக்கா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/23&oldid=1099688" இலிருந்து மீள்விக்கப்பட்டது