பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

229

எழுதுவார்கள். இப்போது எனக்கு இதற்கும் கிண்டலாக கொடுக்கத் தெரியும். ஆசிரியரும் தனித்தமிழல்ல; ‘ஆசார்ய’ என்ற வட மொழிப்பதம் என்று சொல்வேன். வாழ்க்கை முறையிலிருந்து அடியோடு கலாசாரங்களிலேயே பிளவு காணும் வகையில் அவர்கள் செயல்பட்டிருக்கின்றனர். ஸ்லோரும் ஓர் குலம் என்று முழக்கிய காங்கிரஸ் இதைக் கவனிக்கவில்லை. எப்போதோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆரியர்கள் அநீதி இழைத்தார்கள் என்று சொல்லிக் கொண்டு, இப்போது ஒரு சாராருக்கு இந்தத் தமிழ் நாட்டில் பிறந்திருப்பதன் உரிமையையே மறுக்கும் வகையில் விரும்பிய கல்வி கற்பதற்கும் தொழில் புரிவதற்கும் நியாயமான வகையில் பதவிகளைப் பெறுவதற்கும் இடமில்லாமல் போயிருக்கிறது. அதனால் வேற்று நாடுகளிலே, எங்கோ, எப்படியோ தங்கள் ஆற்றலைக் கொண்டு இந்த வகுப்பார் பிழைக்கப் போகவேண்டியிருக்கிறது. வட இந்தியாவில் பல ஆண்டுகளாக இந்த வகுப்பினர் வயிறு பிழைக்கச் சென்று அலுவலகங்களில் பணி புரிந்திருக்கின்றனர். எந்த வகையான மோதலும் கிடையாது. ஆனால் இந்நாட்களில் அதற்கும் ஆபத்து வந்திருக்கிறது. என்னுடன் சுதாராணி என்று ஒரு மராட்டிப் பெண் சோஷியல் சயன்ஸ் படிக்கிறாள். பம்பாயிலும் டில்லியிலும் இன்னும் எல்லா வட இந்திய நகரங்களிலும் தென்னிந்தியாவிலிருந்து சென்ற அடிநிலை மக்களின் சேரிகளைப் பற்றிக் கூறுவாள். பம்பாயிலுள்ள சேரிகளில் முழுசுமாகக் கள்ளக் கடத்தல், திருடு, சோரம் என்ற தொழில்களில் ஈடுபட்டவரே தென்னிந்திய மக்கள் என்பாள். சிவசேனை போன்ற கட்சிகள் இத்தகைய இழிவான நிலையினால் இன்னமும் வலுவடைகின்றன என்பாள்.

“டில்லி போன்ற நகரங்களில் பெரிய மனிதர்வீடுகளில் திருட்டுப் போனால் வேலைசெய்து அண்டிப் பிழைக்கும் இந்த மக்கள் சேரியில்தான் போலீசு சோதனை போடுமாம். கடத்தல் தொழிலில் ஈடுபட்ட தமிழர் தொகை மிக அதிகம் என்று அவள் வாதாடுவாள். இதன் விளைவு, அமைதியுடன் வாழும் மேற்படி மக்களையும் பாதிக்கிறது. ராமன், கிருஷ்ணன் என்று பெயர் முடிந்தாலே தமிழன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/231&oldid=1101280" இலிருந்து மீள்விக்கப்பட்டது