பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

ரோஜா இதழ்கள்

நாயகமோ அல்ல. இது ஜனநாயகமும்கூட அல்ல. பண நாயகம். இதை இப்படி எல்லாம் வெல்ல முடியாது. நான் ஒருத்தி கத்துவேன். எதிர்ப்பேன். வழி அதனால் பிறந்து விடாது. என்னிடம் தனிமையில் கருத்தை ஒப்புக்கொள்பவர் கூட, சமயம் வரும்போது என்னைத் தனியே நிறுத்திவிட்டுப் பெரும்பான்மையோடு சேர்ந்து விடுவார்!” என்று ஞானம் விளக்குகையில் மைத்ரேயி காபி கொண்டு வரச் செல்கிறாள். அவர்கள் சிறிது நேரம் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசுகின்றனர். பிறகு விடைபெற்றுச் செல்கின்றனர்.


16

அவன் முரளி என்று தெரிந்தபின் மைத்ரேயிக்கு நிம்மதியாக இருக்கிறது. அவனுக்குப் பெற்றோர் உற்றார் இருக்கின்றனர். அவர்கள் எட்டு பத்து வரதட்சினை ஐம்பதாயிரம் சீர் என்று கல்யாணம் எதிர்பார்க்கிறவர்கள்.

நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வருகிறது. “எதற்கு இப்ப சிரிக்கறே?” என்று கேட்கிறாள் ஞானம். “ஒன்றுமில்லை. உங்களுடைய எண்ணம், எனக்குச் சிரிப்பை மூட்டுகிறது. இவனுக்குப் பெண் கொடுப்பவர்கள் ஐம்பதாயிரம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.”

“அப்படி உன்னிடம் யார் சொன்னார்கள்? ஜானகி சொன்னாளா ?”

“யார் சொல்லவேணும்? எனக்கு இவனுடைய மனிதர்களை எல்லாம் தெரியும் அக்கா. இந்த உலகில் எனக்கும் ஒரு மதிப்பு என்று என்னை ஏற்றி வைத்தவர் நீங்கள். நேற்று ராஜா வந்தது என்னுடன் பேசியது, என்னைக் கட்சியில் சேரவேண்டும் என்று அழைத்தது அதையெல்லாம் நினைக்க நினைக்க, இரவு முழுவதும் உறக்கம் வராத நெகிழ்ச்சியிலும் பரவசத்திலும் சங்கடப்பட்டேன். எனக்கு இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/258&oldid=1115384" இலிருந்து மீள்விக்கப்பட்டது