பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

ரோஜா இதழ்கள்

“அதுவா? இப்ப லேடஸ்டா ஒண்ணு எழுதியிருக்கேன், பார்த்தேளா? வால்மீகி, கம்பன், துளசி மூணு பேரையும் ஒப்பிட்டு...”

‘பார்க்கலே?”

“பாருங்கோ அவசியம், நீங்கள்ளாந்தான் படிக்கணும்.” ஆட்காட்டி விரலை நீட்டிக் கொண்டு அவர் வற்புறுத்தும் போது சீனிவாசன் வருகிறான்.

“வாங்கோ,எல்லாரும் உள்ளே. கொஞ்சம் டிபன் காபி சாப்பிட்டுப் போனா சரியாயிருக்கும். மணி நாலரையாயிடுத்து...”

முன்கூடத்தை அடுத்த சாப்பிடும் கூடத்தில் கண்ணாடி போன்ற தளத்துடன் சாப்பிடும் மேசையைச் சுற்றி எட்டு நாற்காலிகள் இருக்கின்றன. பளபளக்கும் தட்டுக்களில் கேசரியும் கார சோமாசியும் கொண்டு வந்து சீனிவாசனின் சகோதரியும் இன்னொரு பெண்மணியும் பரிமாறுகின்றனர். தேநீரா, காப்பியா என்று கேட்டுக்கொண்டு போய் எல்லோரும் விரும்பும் காப்பியைக் கொண்டு வருகின்றனர். சிற்றுண்டி முடிந்தபின் மைத்ரேயியும் ராமாயணப் பெரியவரும் லோகாவின் கணவரும் கதர் சட்டை வைத்தியநாதனும் வண்டியில் ஏறிக்கொள்கின்றனர். முன்பு அவள் பார்த்த கடைவீதியின் பின் ஒரு மைதானத்தில் பொதுக் கூட்டமேடை அமைத்திருக்கின்றனர். கறுப்பு, சிவப்பு, நீல நட்சத்திரச் சுவரொட்டிகள், அண்ணாவும் மூதறிஞரும் இணைந்து நிற்கும் படங்கள்.

நட்சத்திரத் தோரணத்துக்கும் குன்றிமணித்தாள் தோரணத்துக்கும் இடையே கூட்டம் சுமாராகக் கூடியிருக்கிறது.

மேடைமீதிருக்கும் ஆறு நாற்காலிகளில் ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்கிறான் சீனிவாசன்.

கூட்டத்துக்குத் தலைமை வகிக்க இருக்கும் சந்தான கிருஷ்ணமாச்சாரி அங்கே அவளுக்கு அறிமுகமாகிறார். பெரிய நாமத்துடன் ஒட்டி உலர்ந்த ஒரு முதியவர். திருச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/292&oldid=1123774" இலிருந்து மீள்விக்கப்பட்டது