பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

ரோஜா இதழ்கள்

தன் படிப்பு, தர்க்க நியாய அறிவு, கொள்கை விளக்கப் பேச்சுக்கள் எல்லாம் இந்தக் கிழவனுக்கு முன் சொல்லிழந்த மொத்தைகளாகப் போகின்றன. தன்னுடைய முதிர்ச்சி யின்மை, அநுபவமின்மை இரண்டுமே பூதங்களாக நின்று தன்னைப் பிணித்துவிட்டதாக நினைக்கிறாள். “அந்தப் பயலுவ, திருட்டுக் கள்ளைக் குடிச்சிட்டு உன்னைத் துாக்கி வரத்துக்கு இருந்தானுவ நான் சொல்றேன். இத்தோட மேடையில் ஏறதில்ல. காங்கிரசு வழிக்கு வரதில்லேன்னு சொல்லு. உன்னெப் பத்திரமா உங்காத்தாவூட்டிலே கொண்டுவுட்டுப் போடறேன். இல்லே... நானே அந்தப் பயங்களை இட்டாந்திடுவேன்.”

அடப்பாவி...!

“ஏன் தாத்தா, இது குடியரசு நாடு, இந்த நாட்டில் எல்லோருக்கும் பேச உரிமை இருக்கிறது. நீங்கள் இப்போது செய்திருப்பது குற்றம். ரொம்பப் பெரிய குற்றம், கோர்ட்டில் வழக்குப் போட்டால் உங்கள் எல்லோருக்குமே ஆபத்து, தெரியுமா ?”

“அட சர்த்தாம்மே, பெரிய கோர்ட்டு நேத்துப் பிறந்த பூனைக்குட்டி நீ. நேரு என்ன, காந்தி என்ன, அவங்கல்லாம் இருந்து வளர்த்த காங்கிரசு, அதுக்கு ஓட்டுப் போடாதேன்னு சொல்றது என்னா நாயம் ? காங்கிரசைப்பத்தி உனுக்கு என்னா தெரியும்? இந்த ரோட்டு, இந்த வெளக்கு, இந்த சினிமா, எல்லாமா முன்ன இருந்திச்சி? அந்தப் போக்கத்த பயலுவ கறுப்புக் கொடி காட்டினாங்க. அவங்ககூட நீங்க சேந்துக்கிறீங்களே, என்ன நாயம் ?”

“தாத்தா, காங்கிரஸ் கட்சிமேலே உங்களுக்கு இருக்கும் விசுவாசத்தை நினைச்சு ரெம்ப சந்தோஷப்படுறேன் நான். ஆனா,இப்ப அது நீங்க இவ்வளவு விசுவாசம் வைக்க உரியதாக இல்லை.”

“சர்த்தாம்மா, நீ ரொம்பக் கண்டுட்டே, நான் சும்மா சும்மாச் சொல்லிட்டு இருக்க மாட்டேன். இந்த வம்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/322&oldid=1101411" இலிருந்து மீள்விக்கப்பட்டது