பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

333

கூட்டத்துக்கு வந்து பேசிவிட்டு இரவைக் கழிக்க அங்கு வருகிறாளோ என்றெண்ணுகிறாள்.

அதற்குள் வாயில் சுற்றுச் சுவர்க்கதவு ஒசைப்படுகிறது. அக்கா? அக்கா ?”

பரபரப்புடன் ஞானம் வாயில் விளக்கைப் போட்டு விட்டுக் கதவைத் திறக்கிறாள்!

அவள் வெளியே வரும்போது மைத்ரேயியின் பின்னே ஒல்லியாக உயரமாக நிற்கும் உருவத்தின் மீது ஞானத்தின் விழிகள் நிலைக்கின்றன.

“ஹலோ... நான்தாம்மா, சிவப்பிரகாசம்!”

“அட...? நான் யாரோன்னு பார்த்தேனே ? வா, வா... உள்ளே வா. நீ என்னமோ பென்ஸில்வேனியாவிலோ, ஃப்ளோரிடாவிலோ இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அங்கேயே கல்யாணம் பண்ணிண்டு தங்கிவிட்டதாகக்கூட யாரோ சொன்னாங்க...?”

“ஐயையோ?...” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்து அவன் உட்காருகிறான். மைத்ரேயி திகைத்தாற்போல் பின் வந்து ஞானத்தின் பின்னே நிற்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. அம்மா ரொம்பக் காயலாவா வாவான்னு எழுதிட்டே இருந்தாங்க, வந்தேன். அவங்க போயி ரெண்டு மாசம் ஆகிறது. திரும்ப இந்த மாசக்கட்சில சிகாகோ போயிடறேன்...”

“இந்த நாட்டின்மேல் அவ்வளவு வெறுப்பு ஏன் ?”

“மாமாகூட இங்கே ஏதானும் வேலையில் இருக்கலாம்ன்னாரு அவர் சிபாரிசில் வேலை கிடைக்கும். அப்புறம் எல்லாரும் அவங்களுக்குத்தான் காலம்ன்னு காய் வாங்க. ஏன் அந்த வம்பெல்லாம்?” என்று குறிப்பாக மைத்ரேயியைப் பார்த்து குறுநகை செய்கிறான்.

“என்னை ஏன் வம்புக்கிழுப்பதுபோல் பார்க்கிறீர்கள்? இங்கே சர்வகலாசாலை ஆராய்ச்சிக் கூடங்கள் எல்லாமும் எப்படி எப்படியோதான் ஆட்களைப் பொறுக்குகிறதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/335&oldid=1100141" இலிருந்து மீள்விக்கப்பட்டது