உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

9


ரோமாபுரிப் பாண்டியன் 9 முதல் கழகத்திலே எழுவர் பாவரங்கேறினர். பா என்றால் செய்யுள். இரண்டாவது கழகத்திலே இடைக்காலத்திலே ஐவர் பாவரங்கேறின .6677. கடைக் கழகத்திலே மூவர் பாவரங்கேறினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்பு இதே இடத்திலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதிலேதான் இவர்களுக்கு "தமிழ்வேள்" என்ற பட்டமும் பேராசிரியர்களால் அளிக்கப்பட்டது. இந்தத் தமிழகம் முழுவதும் மட்டுமின்றித் திராவிட நாடுகளிலிருந்தும்கூட எல்லாத் தமிழ்ப் பேராசிரியர்களும் இங்கு அன்று குழுமியிருந்தார்கள். அவர்களு டைய சார்பிலே அவர்களால் "தமிழ்வேள்" என்ற பட்டமானது இவர்களுக்கு வழங்கப்பட்டது. அதிலே இவர்கள் பாவரங்கேறினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சிறந்த ஆராய்ச்சி முறையிலே தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன. இப்பொழுது அடுத்தபடியாக உரைநடை. பண்டைக் காலத்திலே நம்முடைய புலவர்கள் வழக்கிலே, எல்லாம் செய்யுள் வழக்காகத்தான் இருந்தது. பொதுமக்கள்தான் நம்போலப் பேச்சுக்கள்- உரைநடை என்கிற-'புரோஸ்' என்று சொல்லப்படுகிற வகையிலே பேசி வந்தார்கள். பிற மக்கள், அதாவது புலவர்கள் எல்லாம் எழுதுவது மட்டுமல்ல, பேசுவதுகூடச் செய்யுளாகவே இருந்தது. அந்தக் காலத்திலே! இப்பொழுது ஆங்கிலத்திலே 'கலோக்கியல்', 'லிட்டரரி' என்று பிரிப்பார்கள். நாம் இப்பொழுது உலக வழக்கு, இலக்கிய வழக்கு என்றே சொல்கிறோம். ஆனால் பண்டைக் காலத்திலே எல்லாம் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றுதான் சொன்னார்கள். பண்டை மக்கள் என்று சொல்லும்போது நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தெற்கே முழுகிப்போன குமரி நாட்டிலே இருந்தார்கள். தமிழர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்லர்; சிலர் பலர் கருதுகிறபடி! தென்னாட்டுப் பழங்குடி மக்கள்; அந்தத் தமிழும் தென்னாட்டிலே தோன்றியது. தமிழைச் சிறப்பாக ஒருவர் ஆராய்ந்திருந்தால் - வரலாற்று அடிப்படையிலே ஆராய்ந்திருந்தால் - அதன் உண்மையை அறிவார்கள். தமிழ் வெளிநாட்டி லிருந்து வந்தது என்று எவராவது சொல்வதாய் இருந்தால், ஒன்று அவர்கள் தமிழைச் சரியாக அறியவில்லை என்பது; அல்லது அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பது; இந்த இரண்டில் ஒன்று என்ற அந்த முடிவுக்குத்தான் வரமுடியும். தமிழ் தென்னாட்டிலே தோன்றிய மொழி. ஆகையினால் இந்த ரோமாபுரித் தொடர்புக்கு முன்னாலேயே அது இருந்தது. அந்தத் தமிழ்நாட்டு வரலாறு, இந்த ரோமாபுரித் தொடர்பு என்றால், ரோமர்களுடையது இந்த கி.மு.8ம் நூற்றாண்டு. அதற்கு முன்னாலேயே எகிப்து நாட்டோடும் சுமேரிய நாட்டோடும் தொடர்பு இருந்தது. அடுத்து 'ரோமாபுரிப் பாண்டியன்' என்ற புதினம் இந்த அரங்கத்தில் இப்போது வெளியிடப்பெறும்.