உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

139


வழியில்லை. அரசி படுத்திருக்குமிடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். என்ன ஆனாலும் ஆகட்டுமென்று அந்த இடத்தைக் கடந்து தாமரையைப் பின் தொடர்ந்தாள் முத்துநகை.

அதைக் கண்ட அரசி, "நில்!! நில்!" என்று முத்துநகையைத் தடுத்து விட்டாள்.

முத்துநகை எதுவும் புரியாமல் விழித்தாள்.