ரோமாபுரிப் பாண்டியன்
187
கையைப் பிடித்துக் கொண்டான். முத்துநகை அவனைத் தாக்குவதற்குக் கையை ஓங்கினாள். உடனே, கிழவன் கலகலவென்று நகைத்துக் தன் தாடியையும் தலைமுடியையும் எடுத்து முத்துநகையின் கையில் கொடுத்தான்.
முத்துநகை, "அத்தான்!" என்று ஆசையுடன் அழைத்து அவனைத் தழுவிக்கொண்டாள்.
கூன் விழுந்த கிழவன் நிமிர்ந்து நிற்கும் சிங்கமாய் வீரபாண்டியாய்க் காட்சி அளித்தான்.
"எதிரிகளிடம் காட்ட வேண்டிய திறமையை என்னிடமே காட்டுகிறீர்களா அத்தான்?"
"நீ கூட எதிரி தானே?"
"என்ன?"
"ஆமாம் காதல் எனும் போர்க்களத்தில் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் தான்! அப்போது தானே இந்தப் போர்க்களம் சுவைக்கும் கண்ணே?"
"அதிருக்கட்டும் - இந்த வேடம் எதற்காக?"
"இதுதான் கரிகால்சோழரைச் சந்திப்பதற்காகப் போட்டுக் கொண்டுள்ள வேடம்?"
"ஏன்... உண்மையான வீரபாண்டியாகவே வருவதில் என்ன குற்றம்?"
"என் உண்மை உருவில் வந்தால் என்னையும் உன்னையும் பற்றி அரசர் சந்தேகிக்க இயலும்; நம்மிடையே எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்று எண்ணிடத் தோன்றும்; அந்தச் சாதாரணச் சந்தேகங்கள் கூட யாருக்கும் ஏற்படலாகாது என்பதற்காகவே இந்த வேடம் பூண்டேன். அதிருக்கட்டும், அரசரைப் பார்க்க அனுமதி கிடைத்து விட்டதா?"
"இன்றைக்கே சந்திக்கலாம் - எப்போது வேண்டுமானாலும் அரசர் தயார்!"
"கண்மணி... உன் திறமைக்குப் பரிசாக...." எனக் கூறியபடி இதழ் குவித்தான் இருங்கோவேள்!
நெடுமாறனையும் காரிக்கண்ணனாரையும் வரவேற்று, பயணக் களைப்புத் தீரப் பழச்சாறு வழங்கச் செய்து பாண்டிய நாட்டுத் தளபதியின் நலன்களை விசாரித்து மகிழ்ந்தான் கரிகாலன். மன்னனின் கேள்விகட்கு நெடுமாறன் பதில் அளிக்கும்போது புன்னகையை வரவழைத்துக்