232
கலைஞர் மு. கருணாநிதி
232 கலைஞர் மு. கருணாநிதி ஆனால் வீரனான இருங்கோவேள் அவள் கரத்தை மிக லாவகமாகப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தோடு தன் முகத்தை ஒட்டுவதற்கு முயன்றான். அந்தச் சமயத்தில் "நிறுத்து அண்ணா! நிறுத்து! என்ற கூச்சலுடன் தாமரை உள்ளே நுழைந்தாள். தாமரை எப்படி அங்கு வர நேரிட்டது? பெருந்தேவி வெளியேறிய செய்தியை இருங்கோவேளிடம் சொல் வதற்குச் சென்ற காவலர்கள், மன்னன் அங்கு இல்லாத காரணத்தால் தாமரையிடம் சென்று செய்தியைக் கூறிவிட்டனர். அவளும் அண்ண னைத் தேடிப் பார்த்துவிட்டு கடைசியாக முத்துநகை அடைபட்டிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அங்கு காவல் புரிந்து கொண்டிருந்த வீரன் இருங்கோவேள் மாறுவேடத்துடன் முத்துநகை யிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கூறிவிட்டான். உடனே தாமரை உள்ளே நுழைந்த போது தன் அண்ணன், முத்துநகையிடம் அடாத செயல் புரிவதைக் கண்டு கூச்சல் போட்டுவிட்டாள். தங்கையின் குரலைக் கேட்ட இருங்கோவேள் முத்துநகையைவிட்டுத் திரும்பினான். “தாமரை! நீ எங்கே வந்தாய்?" "வந்தது தவறா? அண்ணா! இது என்ன அக்கிரமம்! இதுவரையில் உன்னை நாங்கள் உத்தமன் என்றல்லவா கருதிக் கொண்டிருந்தோம்! பழிவாங்கத் துடிக்கும் காரணத்தால் என் அண்ணனுக்கு அடிக்கடி கோபம் வருகிறது; சிலரைக் கொடுமைப்படுத்துகிறார்! ஆனால் அவரைப் போன்ற ஒழுக்கசீலர் யாருமே இல்லை என்றல்லவா கூறிக் கொண்டிருந்தேன்! என்றுமில்லாத அநியாயம் இன்று ஏன் அண்ணா?" "தாமரை! இதிலெல்லாம் நீ தலையிடாதே!" "தயவு செய்து என்னை மன்னிக்கவும். அவள் இங்கு சிறைப்பறவை யாக இருக்கலாம். அதற்காக மன்னனின் சிற்றின்பப் பதுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதை நான் மறுக்கிறேன்; தடுக்கிறேன்.” "என் காரியங்களைத் தடுக்க யாராலும் முடியாது. மரியாதையாக வெளியே போய்விடு!' "அண்ணா! நீ எப்படியாவது அழிந்து போ. எனக்கென்ன? நான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன்... அண்ணியைக் காணவில்லை. குதிரையிலேறி ரகசியமாக எங்கேயோ போய் விட்டார்களாம்." ஆ! என்ன? அரசியைக் காணவில்லையா? எங்கே போனாள்” "இந்த அக்கிரமங்களைக் கேள்விப்படக்கூடாது என்று எங்கேயோ போய்விட்டார்கள்"