உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

கலைஞர் மு. கருணாநிதி


242 கலைஞர் மு. கருணாநிதி இயற்றப்பட்ட பட்டினப்பாலையைப் பூம்புகார்க் கொலு மண்டபத்தில் அரங்கேற்றுவதற்காகவே உருத்திரங்கண்ணனார் வருகிறார். அவர் வருகையை முன்னிட்டே அரண்மனை விழாக்கோலம் பூணுகிறது. இன்னும் புலவர் வந்து சேரவில்லை. அவரை மிக்க மரியாதையுடன் கோலாகலமாக வரவேற்க வேண்டுமென்று திட்டம் தீட்டப்பட்டிருந்தது. புலவரை வரவேற்பதற்காக அரண்மனைக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. வாயிற்புறத்தில் காத்திருந்த பெருந்தேவியின் காதுகளி லும் கடியலூர்ப் புலவர் அரண்மனைக்கு வரப்போவது பற்றிய செய்தி எட்டியிருந்தது. வாயிற்புறத்துப் பெருங்கதவுகள் திறக்கப்பட்ட தும் பெருந்தேவி உள்ளே நுழைய முயலாமல் வெளியிலேயே அதிகத் தொலைவில் போய்த் தன் குதிரையுடன் மறைந்திருந்து கவனித்துக் கொண்டேயிருந்தாள். தொலைவில் “சோழப் பேரரசு வாழ்க! கடியலூர்ப் புலவர் வாழ்க!" எனும் முழக்கம் கிளம்பியதை அவள் கேட்டாள். அவள் மறைந்து நின்ற இடத்துக்கு அருகாமையில் அந்த ஒலி வந்து விட்டது. அழகான முத்துச் சிவிகையொன்றில் புலவர் அமர்ந்திருந்தார். புலவரின் முகத்தில் வெற்றிரேகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அவரது கையில் சுவடி ஒன்றிருந்தது. அந்தச் சுவடிதான் எதிர்காலத்தில் பத்துப்பாட்டு வரிசை யில் பழம் பெரும் இலக்கியமாக அமையப் போகிறது என்று அவர் எண்ணினாரோ இல்லையோ - ஆனால் அவரது கண்கள் சுவடியிலேயே ஆழ்ந்திருப்பதைக் காணும் எவரும் அந்தப் படைப்பு நிச்சயம் அழியாத உயிர்பெறும் என்றுதான் கூறுவர். தான் எழுதியவைகளைத் திரும்பத் திரும்பப் படித்துத் திருத்தங்கள் செய்து கொண்டே வந்தார், சிவிகையில் இருந்தவாறே! அவர் எழுதியது அவருக்கே இனிக்கிறது போலும். அதனால்தான் அவரது முகத்தில் அத்தனை கம்பீரம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. "திருமாவளவன் தெவ்வர்க் கோச்சிய வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே!" - காதலியின் தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு காதலன் காட்டு வழியே செல்கிறானாம். அப்போது அவன் காட்டுக்கு உவமை தேடுகிறான். கரிகாலன் தனது பகைவர்களின்மீது வீசிய வேலைக் காட்டிலும், கடியதாயிருந்ததாம் அந்தக் காடு. அவன் பற்றியுள்ள தோள் எப்படியிருந்ததாம்? கரிகாலனின் செங்கோலினும் குளிர்ந்ததாகுமாம். தான் எழுதியவற்றைத் தானே சுவைத்தார் புலவர். தன் எழுத்தை, எல்லாரையும் விட அதிகமாகச் சுவைத்துப் பாராட்டக் கூடியவர் ஒருவர். பூம்புகாரில் இருக்கிறார். அவர்தான் முதலில் தனது பட்டினப்பாலை