உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

கலைஞர் மு. கருணாநிதி


250 கலைஞர் மு. கருணாநிதி அதற்கு நெடுமாறன், "இது போல இரண்டு மூன்று முயற்சிகள் நடைபெற்று விட்டன, அரசரைக் கொல்ல!" என்று பதில் அளித்தான். "பகைவர்கள் பூம்புகாரில் நுழைவதற்கும். மாளிகையிலும் கொலுமண்டபத்திலும் விருப்பம் போல பிரவேசிப்பதற்கும் இடமளித்து விடுகிறார்களா?" புலவரின் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால் அதற்கு பதில் சொல்ல நெடுமாறன் சிறிது தயங்கினான். ஆயினும் பதில் கூறினான்: "வெளியில் மட்டுமல்ல, பூம்புகாருக்குள்ளேயே கரிகால் சோழருக்கு விரோதமாகக் காரியங்கள் நடக்கின்றன. அந்த துரோகிகளை கண்டு பிடிக்கும் விஷயத்தில் மன்னன் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டார். அதன் விளைவு விபரீதமாகப் போன பிறகுதான் இப்போது சில நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்." 14 வியப்புக்குரிய செய்தியாக இருக்கிறதே! சோழ மண்டலத்தில் துரோகிகளா?" ஆமாம். இப்போது நான் சொல்லப் போவதைக் கேட்டால் மேலும் வியப்படைவீர்கள். பகையரசன் இருங்கோவேளுடன் தொடர்பு கொண்டு துரோகம் புரிந்தார் என்ற காரணத்திற்காகப் புலவர் காரிக்கண்ணனார் கூடச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்!" என்ன! காரிக்கண்ணனார் சிறைப்பட்டிருக்கிறாரா?" ல் ஆமாம். எனக்குத் தெரியாது என்றுதான் மன்னர் நினைத்துக் கொண்டிருக்கிறார். மாளிகையில் உள்ள முக்கியமான வீரர்கள் மூலம் நான் அறிந்து கொண்ட உண்மையிது. யவனக் கிழவர் வேடத்தில் வந்த இருங்கோவேளுடன் காரிக்கண்ணனார் பேசிக் கொண்டிருக்கும்போது பிடிப்பட்டிருக்கிறார். ஆனால் பிடிக்கப் போன வீரர்களைத் தந்திரமாக ஏமாற்றி இருங்கோவேளைத் தப்பியோடச் செய்து. யவனக் கிழவர் வேடத்தில் தானே வந்து கரிகால் மன்னரின் கையில் சிக்கிக் கொண்டார்." “அப்படியா? நம்பவே முடியவில்லையே!" "கேள்விப்பட்டதும் நானும்தான் நம்பவில்லை. மன்னர் காரிக்கண் ணனாரிடம் வைத்திருந்த அன்பு அளவு கடந்தது. அவரை மன்னர் பொன்னே போல் போற்றி வந்தாராம். ஆனால் மயில் தோகைக்குள்ளே முள்ளம்பன்றி மறைந்து கொண்டிருந்திருக்கிறது!” காரிக்கண்ணனார் பற்றிய செய்தி கேட்டதும் கடியலூர்ப் புலவரின் நெஞ்சம் கொதிக்கத் தொடங்கியது. குமுறலும் கொந்தளிப்பும் மிகுந்த உள்ளத்தோடு நடுங்கும் குரலில் கண் கலங்க அவர், பாண்டியத் தளபதியைப் பார்த்து, "தமிழுக்கே இது அவமானம்!" என்று கதறினார்.