உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

கலைஞர் மு. கருணாநிதி


274 கலைஞர் மு.கருணாநிதி கருதவில்லை. மீண்டும் அதே வேண்டுகோளை அவளிடம் வலியுறுத்தி னான். தாமரை, செழியனைக் கனிவுடன் நோக்கினாள். "வேண்டுகோள் நியாயமானது தான். ஆனால் அதை நிறைவேற்றி வைப்பது எவ்வளவு தவறானது என்பதைத் தாங்களே உணர முடியும். இங்கே நீங்கள் ஒரு அடிமை. இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். எங்களுக்கு நீங்கள் பகைவர்; பகைவரை வெளியில் அனுப்புவது என்பது சரியான காரியமாகுமா? யாராவது அகப்பட்ட எதிரியை வெளியேவிட்டு ஆபத்தை வரவழைத்துக் கொள்வார்களா?" "உனக்கு வேண்டுமானால் நான் உறுதி அளிக்கிறேன். உன் பாதுகாப்பிலேயே நான் பூம்புகார் வருகிறேன். உன் அண்ணனுக்குக் கூடத் தெரிய வேண்டாம்; சகோதரியின் முகத்தைக் கண்டபிறகு உன்னுடனேயே திரும்பி வந்து இந்தச் சிறையில் புகுந்து கொள்கிறேன். நீ நம்பவில்லையானால்... என் உடைவாளின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்' "அண்ணியின் சவ அடக்கத்திற்கு அண்ணன் செல்கிறாரோ இல்லையோ; அது கூட எனக்குத் தெரியாது. நான் போகிறேன் என்பது நிச்சயமாகி விட்டது. தங்களை அழைத்துச் செல்வதானால், அண்ணிக் கும் தங்களுக்கும் இருக்கிற உறவையாவது வெளியில் சொல்லியாக வேண்டும். தாங்களோ அந்த உறவை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறுகிறீர்கள். இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்? அண்ணியின் தம்பி என்பதற்காகத் தங்கள் மீது அனுதாபம் காட்டுகிறேன். அண்ணனின் எதிரியென்கிறபோது நான் என்ன உதவி செய்ய முடியும்? "தமிழ்நாட்டுப் போர் மறவன் எவனும் ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு ஓடிவிட மாட்டான். நம்பியவர்களை மோசம் செய்வது தமிழ்க்குருதி ஒடுகிறவர்களின் பழக்கம் இல்லையென்பது உனக்குத் தெரியாதா என்ன? நான் சொல்வதைக்கேள். நீ, அண்ணிக்கு இறுதிச் சடங்கை நடத்தி வைக்கப் பூம்புகாருக்குப் புறப்படும்போது உன்னோடு நானும் வருகிறேன்; உன்னுடைய பாதுகாப்புப் படை வீரனாக வருகிறேன். என்னை யாரும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத படி உன்னைப் பாதுகாக்கும் வீரனைப் போலவே நடித்து விடுகிறேன். உன்னை மோசம் செய்துவிட்டு நழுவிடப் பார்க்கிறேன் என்று உனக்குக் கடுகளவு சந்தேகம் வந்தாலும் உடனே கட்டாரியை என் மார்பின் மீது வீசிவிடு. களம் பல கண்ட என்னுடைய போர் வாளின் மீது ஆணை! என்னைப் பெற்றெடுத்த தமிழன்னையின் மீது ஆணை! பாண்டியர் பெருவழுதி, சோழர் கரிகாலர் இருபெரும் மன்னர்களின் மீதும் ஆணை! உன்னை நான் ஏமாற்ற மாட்டேன். தப்பியோட முயல மாட்டேன்.