இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
292
கலைஞர் மு. கருணாநிதி
292 கலைஞர் மு.கருணாநிதி மன்னனின் கண் ஜாடைக்குக் காத்திருந்தவர்கள் பெருந்தேவியாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற் கான வேலைகளில் தீவிரமாக இறங்கினர். அப்போது ஒரு வீரன் பதைபதைப்புடன் அங்கு ஓடி வந்து மன்னனை வணங்கி, அவன் காதில் ஏதோ ஒரு ரகசியத்தைக் கூறிவிட்டு நடுங்கியபடி நின்றான். மன்னன் தன்னையுமறியாமல் "ஆ"! எனக் கத்திவிட்டான்! சூழ இருந்தவர்களைப் பார்த்து, "காரியங்கள் ஆகட்டும் - இதோ வந்து விடுகிறேன்! என்று கூறியவாறு கரிகாலன் அதை விட்டு அகன்றதைத் தாமரையும், செழியனும் மற்றவர்களும் வியப்புடன் கவனித்தனர்.