இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
304
கலைஞர் மு. கருணாநிதி
304 கலைஞர் மு. கருணாநிதி பெருந்தேவியைப் புதைத்த இடத்தில் எழுப்பிய மண்மேட்டின் மீது அரசவைப் பிரதிநிதிகள், மந்திரிகள், தளபதிகள் அனைவரும் மலர் தூவித் தங்கள் இரங்கலைத் தெரிவித்து இறுதி வணக்கம் கூறினர். வேளிர்குல இளவரசி தாமரை தன் கண்ணீரில் நனைந்த மலர்க் கொத்தை அண்ணியின் கல்லறை மீது வைத்துவிட்டு, அருகே நிற்கும் அண்ணனைத் திரும்பிப் பார்த்தாள். திடுக்கிட்டாள்! அவனைக் காணவில்லை. அவனைத் தேடும் முயற்சியில் பரபரப்புக் காட்டக் கூடாது என்பதையும் அவள் உணர்ந்து, ஓர விழிகளைச் சுழலவிட்டு அண்ணனைக் கண்டுபிடிக்க முடியாமல் தத்தளித்தாள்.