உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

கலைஞர் மு. கருணாநிதி


320 கலைஞர் மு. கருணாநிதி போலும்' என்று கருதிச் செந்தலையாருக்கு முன்னே பரபரப்புடன் கூட ஆரம்பித்தார்கள். செந்தலையார் தலை நிமிர்ந்தார். தன் விழியோரத்தில் துளிர்த்து நின்ற கண்ணீரை வழித்து உதறினார். இப்போது அவருடைய நிமிர்ந்த தோற்றத் தில் - நேரிய பார்வையில் - உயர்ந்த கரங்களில் புது வேகம் பளிச்சிட் டது! போர்வெறி பிடித்தோருக்கு மத்தியிலே நிற்கும் தானைத் தலைவனைப் போல் தோற்றமளித்தார். அவரது உருளும் செவ்விழி களும் உணர்ச்சியால் துடிக்கும் கரங்களும் - உரத்த குரலெழுப்பத் தயாராக நிற்கும் உதடுகளும்இடப்போகின்ற ஆணை என்னவோ என்று காத்துக் கொண்டு நின்றது அந்தப் பெருங்கூட்டம். - அவர் ஏதோ விபரீதத்திற்கு வித்திடத்தான் போகிறார் என்றுணர்ந்த முத்துநகையின் உள்ளத்தில் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. தான் எப்படியும் அந்த அறையிலிருந்து தப்பிவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். பலகணி வழியாக வெளியே பார்த்தாள். காவலுக் கென்று வாசலில் நிறுத்தப்பட்டிருந்த வேளிர்குலத்து வீரன் இன்னும் செந்தலையாரை நோக்கி ஓடவில்லை. அவள் எப்படித் தப்புவது? அறையில் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தினாள். ஓரே ஒரு பலகைக் கட்டிலையும், கீழே விழுந்து கிடந்த கட்டாரியையும் தவிர வேறு எந்தக் கருவியுமே கிடையாது. அவைகளைக் கொண்டு தப்புவது என்பது இயலாத காரியம். புதுவேகம் பெற்று விட்ட அவளது மூளையில் கணநேரத்தில் ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே பலகணிக்கு அருகே சென்று சத்தம் வெளியே கேட்கும்படியாகக் கீழே விழுந்தாள். வீரன் திடுக்கிட்டு உள்ளே பார்வையைச் செலுத்தினான். “தண்ணீர்! தண்ணீர்!!" என்று கால், கைகளை உதைத்துக் கொண்டு முத்துநகை கத்தினாள். வீரனை நோக்கி, 'தண்ணீர் வேண்டும்' என்றும் சைகையால் காட்டினாள். படர்ந்து வந்து இருளில் அவளைச் சரியாக அடையாளம் புரியாதவீரன், உடனே தண்ணீர் எடுக்க ஓடினான். சற்று நேரத்திற் கெல்லாம் சிறிய மண் கலயம் ஒன்றில் நீர் கொண்டு வந்து அதைப் பலகணியின் வழியாக நீட்டினான். ஆனால் பலகணியில் பொருத்தப் பட்டிருந்த மரச்சட்டங்களுக்குள் கலயம் நுழையவில்லை. என்ன செய்வது என்று அவன் கணநேரம் கூட யோசிக்க இடம் வைக்காமல் முத்துநகை "சீக்கிரம்! சீக்கிரம்!! கதவைத்தான் திறந்து கொண்டு வாயேன்!' என்று கதறினாள். வீரன் கதவைத் திறந்தான். கலயத்தை நீட்டினான். அதை வாங்கிய முத்துநகை சற்றும் எதிர்பாராத வகையில் அவன் முகத்தில் வீசியடித்தாள். அதிர்ச்சியால் தடுமாறிய வீரன் தன்னைச் சமாளித்துக் கொள்வதற்குள்