உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

329


ரோமாபுரிப் பாண்டியன் 329 வந்து கொண்டிருக்கும் அந்தக் கிழட்டுச் செந்தலையாருக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது? இப்படி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த முத்துநகையின் கண்களில், தூரத்தில் வேறோர் அதிசயமான காட்சி - ஆனால் அதிர்ச்சி தரக்கூடிய காட்சி -தோன்றியது. - வேறொரு பாதையில் இருங்கோவேளின் படையைச் சேர்ந்த குதிரைகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்தக் குதிரைகளை ஒரு சிலரே கண்காணித்துச் சென்றனர். முத்துநகைக்குச் செந்தலையாரின் தந்திரம் புரிந்துவிட்டது. 'பண்டாரப்படை தலைநகரில் புகுந்து அரண்மனையில் நுழைய நேரம் பார்த்திருக்க வேண்டியது. நுழையும் நேரத்தில் குதிரைகள் தேவைப்படுமாதலால் அதற்கான குதிரைகளை வேறொரு பாதையில் பூம்புகாருக்குக் கொண்டு செல்ல வேண்டியது.' எங்கே-எப்போது-எந்தத் தந்திரம் கையாளப்பட்டுப் பண்டாரங்கள் அந்தக் குதிரைகளை அடைவார்களோ தெரியவில்லை. செந்தலையாரின் சூழ்ச்சியில் ஒரு பகுதியை மட்டும் அவள் புரிந்து கொண்டாள். அந்தக் குதிரைகளால் இப்போது இங்கு தொல்லையில்லை என்ற மகிழ்ச்சியுடன் முத்துநகை, செந்தலையாரும் படைவீரர்களும் எதுவரையில் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தாள். இப்போது அவர்கள் மரவியூகத்துக்கு மத்தியிலே வந்து விட்டார்கள். இன்னும் தங்களுடைய தலைவனிடமிருந்து ஆணை பிறக்கவில்லையே என்று பூம்புகார் மக்கள் துடிதுடிப்புடன் மேலே மரக்கிளையின் உச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், தங்கள் கழுத்து வலியையும் பொருட்படுத்தாமல்! மரவியூகத்துக்குள் பண்டாரப்படையின் வரிசை வரவர முத்து நகைக்கு உள்ளத்திலே ஒரு கலக்கம் ஏற்பட்டது. போர் புரிய வேண்டுமே. அந்தப் போரில் தன் உயிர் போய்விட்டால் என்ன செய்வது என்ற கலக்கமல்ல, அது! வெறியும் முரட்டுத்தனமும் கொண்ட இருங்கோவேள் படையினரின் வாளுக்கும் வேலுக்கும் தன் நாட்டு மக்கள் அனைவரும் பலியாகிவிடக்கூடுமோ? வெற்றிபெற்ற வேளிர்படை, பூம்புகார் அரண்மனையிலும் நுழையக் கூடுமோ என்ற ஐயப்பாட்டின் மீது எழுந்த கலக்கமே அவளை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. - மிகவும் நெருக்கடியான அந்த நேரத்தில் அவளுக்குப் பின்புறமாகச் சிறிது தொலைவில் குதிரையொன்று வேகமாக வரும் காலடி ஓசையும் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். மரங்களின் மறைவிலும் புதர்களின் ஓரத்திலும் குதிரை வந்து கொண்டிருந்ததால் அதில் அமர்ந்திருந்தது யார் என்று கண்டுபிடிப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.